என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை
    X
    ரேஷன் கடை

    விருதுநகர் மாவட்டத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

    விருதுநகர் மாவட்டத்தில் 96.65 சதவீதம் அளவிற்கு அதாவது 5 லட்சத்து 72 ஆயிரத்து 375 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    நாளை (17-ந் தேதி) நியாய விலை கடைகள் திறந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுளள்து.
    Next Story
    ×