என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருட்டு
  X
  திருட்டு

  வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தாயில்பட்டி:

  வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நிர்வாக பிரச்சினை காரணமாக இந்த கோவில் மூடப்பட்டு உள்ளது. இந்த கோவில் ஏழாயிரம் பண்ணையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த கோவிலின் துணைச்செயலாளர் பாக்யராஜ் என்பவர் நடைபயிற்சிக்கு கோவில் வழியாக சென்றார். அப்போது கோவில் அருகில் வந்த போது கருவறையில் விளக்கு எரிவதை பார்த்துள்ளார். ஒரு ஆண்டாக மூடப்பட்டிருக்கும் கோவிலில் இதுவரை கோவிலுக்குள் விளக்கு எரிந்தது கிடையாது. இதனால் சந்தேகத்தின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் கோவில் பூட்டை திறந்து கோவிலுக்குள் சென்றபோது சாமி கழுத்திலிருந்த 6 கிராம் தாலி செயின் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து பாக்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×