என் மலர்
விருதுநகர்
- 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
- காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 16,82,050 (98.50 சதவீதம்) நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 15,81,862 (92.64 சதவீதம்) நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி 2,69,354 நபர்களுக்கும் என மொத்தம் 35 லட்சத்து 33 ஆயிரத்து 266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.
தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்
அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
- பஸ்-ஆட்டோவில் சென்ற பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கம்மாள் (வயது 65). இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ராஜபாளையத்தில் இருந்து மம்சாபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்று விட்டான். இதுபற்றி ரெங்கம்மாள் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருேக மடவார் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (76). இவர் பஸ்சில் இருந்து இறங்கியதும், 3 பெண்கள் ஆட்டோவில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து முத்தம்மாள் அவர்களுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு சென்று விட்டனர். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டது தெரியவந்தது. இதுபற்றி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.
- தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மதுரையை சேர்ந்த மெக்கானிக் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பொன்விழா மைதானம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு ஏ.சி. பொருத்து வதற்கான பணிகள் நடைபெற்றது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஷாருத் (வயது 24) என்பவர் இன்று காலை ஏ.சி. பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏறி நின்ற ஏணி நிலைத்தடுமாறியதால் மின் கம்பி மீது அவரது கைகள் பட்டதால் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சொத்து தகராறில் தம்பிையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (வயது52), முருகன் (32), மணிகண்டன் (29), விநாயகமூர்த்தி (22) என்ற மகன்களும், ராஜேஸ்வரி (24), முருகேஸ்வரி (48) என்ற மகள்களும் உள்ளனர்.
இவர்களுக்கிடையே பல வருடங்களாக குடும்ப சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சொத்து பிரச்சினை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதன் பேரில் அனைவரும் நேற்று மாலை சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள முத்தீஸ்வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஒருவருக்கு ஒருவர் வாக்கு வாதம் ஏற்பட்டு ள்ளது.
இதில் பயங்கர ஆயுதங்க ளுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கழுத்து அறுக்கப்ப ட்டு படுகாயம் அடைந்த முருகன், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ெசல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
3 பேருக்கு சிகிச்சை
மேலும் இந்த சம்பவத்தில் முருகன் மனைவி இந்திராதேவி, அவரது தாயார் பெரியதாய், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலைவழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பெயிண்டர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் சுந்தர்ராஜன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 37). பெயிண்டர். இவர் நேற்று முன் தினம் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் வழிநெடுக பூக்களை தூவி சென்றார். அப்போது அவருக்கும், சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் பாலமுருகனை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் சுந்தர்ராஜன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செல்லையாபுரத்தைச் சேர்ந்தவவர் ராமர். இவரது மகள் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மில்லில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி ராமர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் சத்யா. இவரது மகளுக்கு வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் மாயமாகி விட்டார். இதுபற்றி சத்யா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ைண தேடி வருகின்றனர்.
விருதுநகர் நியூ ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமாகி விட்டார். இதுபற்றி கவிதா விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர் தூதுவர் பயிற்சி திட்ட கருத்தரங்கு நடைபெற்றது.
- முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல்துறை சங்கப்பலகை இலக்கிய–மன்றமும், தமிழ்நாடு அரசின் தமிழ்வளா்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்கமும் இணைந்து "சொற்குவை" மாணவ தூதுவர் பயிற்சித் திட்டம்-2022 என்னும் தலைப்பிலான பயிலரங்கை நடத்தியது.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் விசயராகவன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "சொற்குவை என்பதற்கு சொல் குடுவை என்பது பொருள் ஆகும். சொற்குவை என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் முனைவர் பரஞ்சோதி ஆவார். ஒரு சொல்லிற்குப் பல பொருளும் பல–பொருளிற்கு ஒரு சொல்லும் உடைய மொழி தமிழ்மொழி ஆகும். அன்றாடம் பேசும் போது பிறமொழி கலவாமல் தமிழில் பேசுங்கள். அதுவே தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.
மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் இயக்குநர் பசும்பொன் "மொழியில் சொற்பிறப்பு. கலைச்சொல்லாக்கம்" என்ற தலைப்பிலும், சென்னை. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப்பேராசிரியர் சுலோசனா "இலக்கியத்தில் கலைச்சொற்கள்''என்ற தலைப்பிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத்தலைவர் ரேணுகாதேவி "அகராதியியலின் நோக்கும் போக்கும்'' என்ற தலைப்பிலும், தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அமுதா "மொழிபெயர்ப்புக்கலை" என்ற தலைப்பிலும், உதவிப்பேராசிரியர் பொற்கொடி ''கணினிததமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.
தமிழியல்துறைத் தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பல துறைகளைச் சேர்ந்த 210 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
- நேற்று (18-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத–ரெட்டி விடு–த்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட அரசு , தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டிற்கான ஓராண்டு , ஈராண்டு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வின் மூலம் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை நிரப்ப நேற்று (18-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:- www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் தகுதியானவர்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.50,-ஐ டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு , ஜி பே, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ , மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வரு–மாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி , மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை , மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750 (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்), மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை.
விருதுநகர், அருப்புக்கோட்டை ,சாத்தூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர ஆன்லைன் மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) , பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ,ஆதார் அட்டை , பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம் ஆகியவை ஆகும்.
மேலும் விபரங்களுக்கு விருதுநகர்: 04562-294382, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் - 04562-294755 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2022-ம் ஆண்டில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சேர்க்கை ஆணை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.6.16 கோடியில் தொழிற்பயிற்சி நிலைய பணிமனை-சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- 10,568 ச.அடி. பரப்பளவில் பணிமனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன் வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதேபோன்று பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகையும் கட்டடப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ்
நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களுடன் ரூ.2 ஆயிரத்து 877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி மையம் 4.0 தொடங்கப்படவுள்ளது.
இந்த புதிய அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் 10,568 ச.அடி. பரப்பளவில் பணிமனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதில் தொழிற்சாலை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி பிரிவு, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திப் பிரிவு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
சாத்தூரில் சுற்றுலா மாளிகை கட்டிடமானது, 2 தளங்களை கொண்டதாக கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கோட்டாட்சியர் அனிதா, நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், நகரசபை தலைவர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் செந்தூர், வட்டாட்சியர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் ஐவராஜா (வயது28). அவர் கடையநல்லூரை சேர்ந்த திருநங்கை ஹன்சிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐவராஜா சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஹன்சிகா மற்றும் திருநங்கைகள் பிருந்தா, முகிலா, செல்லா, தீபா ஆகியோர் சோலைசேரிக்கு வந்தனர்.
அப்போது ஐவராஜாவின் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விருதுநகரில் பாலத்தின்கீழ் பதுக்கி வைத்திருந்த 1,880 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அண்மை காலமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோதிகள் ரேசன் அரிசியை வாங்கி அதனை ஆலைகளில் பாலீஷ் செய்து மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரம் பாலத்தின் கீழ் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீ சார் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது பாலத்தின் கீழ் கிட்டங்கி அமைத்து ரேசன் அரிசி பதுக்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த 1,880 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல்






