என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் கொலை: தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது
- பெயிண்டர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் சுந்தர்ராஜன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 37). பெயிண்டர். இவர் நேற்று முன் தினம் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் வழிநெடுக பூக்களை தூவி சென்றார். அப்போது அவருக்கும், சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் பாலமுருகனை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் சுந்தர்ராஜன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துசெல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.






