search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist House"

    • ரூ.6.16 கோடியில் தொழிற்பயிற்சி நிலைய பணிமனை-சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • 10,568 ச.அடி. பரப்பளவில் பணிமனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன் வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதேபோன்று பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகையும் கட்டடப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ்

    நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களுடன் ரூ.2 ஆயிரத்து 877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி மையம் 4.0 தொடங்கப்படவுள்ளது.

    இந்த புதிய அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் 10,568 ச.அடி. பரப்பளவில் பணிமனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதில் தொழிற்சாலை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி பிரிவு, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திப் பிரிவு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    சாத்தூரில் சுற்றுலா மாளிகை கட்டிடமானது, 2 தளங்களை கொண்டதாக கட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கோட்டாட்சியர் அனிதா, நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், நகரசபை தலைவர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் செந்தூர், வட்டாட்சியர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×