என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
- விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற எதுவாக பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைபெறுகிறது. கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கனாக்கு எண், ஆதார் அட்டை நகல், எம்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு கடன் மனு அளித்து பயனடையலாம்.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து கடன் பெற்று பயனடையலாம். பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் (9489927001) கடன் பிரிவு உதவி பொது மேலாளர் (9489327006), கடன் பிரிவு மேலாளர் (9489927177) என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் அருகே வத்திராயிருப்பில் போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
- இது சம்பந்தமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முனியாண்டி. இவர் சம்பவத்தன்று வ.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாரதி, ரஞ்சித்குமார், முத்துகுமார், வசந்த், வினீத் ஆகிய 5 பேர் அந்த பகுதியில் ரோந்து வரக்கூடாது என போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் போலீஸ்காரர் முனியாண்டி மீது கம்பு, கற்களை வீசி அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இதுகுறித்து முனியாண்டி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில் மேற்கண்ட 5 பேர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கல்வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெண் குழந்தை பெற்றதாக கூறி இளம்பெண் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
- இது சம்பந்தமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சுந்தரி ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்யாதேவி (வயது 24) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மானது.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தில் வாடகை வீட்டில் குடிேயறினர். அவர்களுடன் ராஜேஷ்கண்ணனின் அக்காள் அனுராதாவும் தங்கியிருந்தார்.
ராஜேஷ் கண்ணனுக்கு சரண்யாதேவியை விட அதிக வயது என்று கூறப்படுகிறது. அதனை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறி தனது கணவரிடம் சரண்யாதேவி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யாதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், பெண் குழந்தை பெற்றதாக கூறி சரண்யாதேவியை அவரது கணவர் மற்றும் கணவரின் அக்காள் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தனது குழந்தையுடன் சரண்யாதேவி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர் மற்றும் அவரது அக்காள் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் ராஜேஷ்கண்ணன் மற்றும் அவரது அக்காள் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.
அதேபோல் தற்போது கட்டிடங்கள் முழுமைத்திட்ட நிலப்பயன் மாற்றம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சரிபார்ப்பு படிவத்தின்படி, ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
- இதுகுறித்து வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகளும் செங்கமல நாச்சியார்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மலர்கொடியின் மகள் தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்து விட்டார். இங்கிருந்து அவர் தனியார் கிளினீக் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மகளை அழைத்து கொண்டு வேலைக்கு சென்ற இளம் பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மலர்கொடி வச்சக்காரபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை இ.முத்துலிங்காபுரத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அளவுக்கு அதிகமாக மது குடித்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மாடசாமி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை மகன் மகேந்திரன் ேதடினார். அப்போது சாலையோரத்தில் மயங்கிய நிலையில் மாடசாமி கிடந்தார்.
அவரை அங்கிருந்து மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் மகேந்திரன் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருப்புகோட்டையில் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அருப்புகோட்டை
அருப்புகோட்டையில் மீண்டும் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது
பத்திரம் சவுண்டு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நேற்று அதிகாலை சிவகாசியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
சரவண குமார் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே உள்ள ஜன்னலில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்று தூங்கி உள்ளார். மாலையில் அவரது மனைவி முருகேஸ்வரி வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ள பீரோவை திறந்து உள்ளார். அப்போது மிளகாய் பொடி வாடை அடித்துள்ளது.
மேலும் சேலைகளுக்குள் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் .
தமிழக அரசு உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புகோட்டையில் சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எம்.டி.ஆர். நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் இரட்டை கொலை, கோபாலபுரத்தில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் சந்தேக மரணம், பூட்டிய வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை, இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- ராஜபாளையம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
- தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து இந்த முகாமை நடத்தியது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இதை தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மையப்பநாடார் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ- மாணவிகள் அனைவரும் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் விளையாட்டிலும் முக்கியத்துவம் வழங்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும். அதனை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்றார்.
இதில் ஊர்த்தலைவர் உதயசூரியன், பள்ளி தாளாளர்கள் ரவிசந்திரன், பாலாஜி, ராஜ்பாபு தலைமை ஆசிரியர்கள் தனபால், செலினாபாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தி.மு.க. கிளை செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- இதில் அனைவருக்கும் மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ராஜபாளையம் அரவிந்த் ஹெர்பல்ஸ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் ஜெயகண்ணன், செயலாளர் ராம்குமார், முத்துராமலிங்க குமார், உறுப்பினர்கள் லட்சுமணன், சுப்புராம், பொருளாளர் ஸ்ரீராம், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். அனைவருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- விருதுநகர் அருகே மருந்துகடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
- திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தலைபாண்டி (வயது 27). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது பெற்றோரை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தலைபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அவரது சகோதரர் முத்துப்பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடுகளை கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டி மேலூரைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது ஆடுகள் பெரியவீரன், சின்னவீரன் என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில் போய் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் குருணை மருந்து வைத்துள்ளனர்.
அதனை தின்ற 10 ஆடுகள் இறந்து விட்டன. இதுபற்றி அய்யனார் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகு தமிழரசி. இவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.
செல்வகுமாருக்கு ஏற்கனவே தேன்மொழி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் தேன்மொழி மற்றும் அவரது தந்தை சேகர், தாய் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் அழகு தமிழரசியுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது செல்வகுமாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி தனது மனைவி அழகு தமிழரசியை அடித்து அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மேலும் 10 பவுன் நகை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
நகை வாங்கி வராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அழகு தமிழரசி அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






