தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

அருப்புகோட்டையில் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடரும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
Published on

அருப்புகோட்டை

அருப்புகோட்டையில் மீண்டும் பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது

பத்திரம் சவுண்டு செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நேற்று அதிகாலை சிவகாசியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

சரவண குமார் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே உள்ள ஜன்னலில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்று தூங்கி உள்ளார். மாலையில் அவரது மனைவி முருகேஸ்வரி வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ள பீரோவை திறந்து உள்ளார். அப்போது மிளகாய் பொடி வாடை அடித்துள்ளது.

மேலும் சேலைகளுக்குள் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் .

தமிழக அரசு உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அருப்புகோட்டையில் சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எம்.டி.ஆர். நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் இரட்டை கொலை, கோபாலபுரத்தில் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் சந்தேக மரணம், பூட்டிய வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை, இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com