என் மலர்
விருதுநகர்
- காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தது.
- 17 கல்லூரிகளைச் சேர்ந்த 256 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றத்தின் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. துறைத்தலைவி லலிதாம்பிகை வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, மாணவர்களின் பன்முக திறமைகளை வெளிக்கொணர்வதே இதன் நோக்கமாகும் என்றார்.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரை வாசித்தல், சிக்கலான கணக்குகளை தீர்த்தல், கணித வண்ண கோலம், மவுனமொழி, வடிவியல் முறை வரைதல், எண் தகுதி தேர்வு ஆகியவை நடைபெற்றன. இதில் 17 கல்லூரிகளைச் சேர்ந்த 256 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி முதல் பரிசையும், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி 2-ம் பரிசையும் பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். உதவி பேராசிரியை காளீஸ்வரி நன்றி கூறினார்.
- இன்று முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி.
- தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.
மழைபெய்யும் நாட்களில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்தநிலையில், புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதனால் 13 நாட்களுக்கு நாள்தோறும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சதுரகிரியில் சாமி தரிசனம் செய்யலாம்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது.
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்யும் நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடர்ச்சியாக 13 நாட்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- கொல்லம் விரைவு ரெயில் நிற்காததை கண்டித்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் போராட்டம்
விருதுநகர்:
சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரெயில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிவகாசியில் இன்று ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயல் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர். ரெயில் நிலையம் நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிவகாசி எம்எல்ஏ அசோகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
- விருதுநகரில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜாஜி ரோடு பகுதிைய சேர்ந்தவர் நடராஜன் (வயது 79). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் அதிகளவில் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்ைச அளித்து காப்பாற்றினர். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சிதம்பரம் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ராஜபாளையம் கிளை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார். கிளை தலைவர் ஜான் பாட்ஷா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாநில பேச்சாளர் முகம்மது ஷபீக் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.
- சாத்தூரில் திருமணமான பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் மன்னா ர்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பெர்சியாள் (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
திருமணமான இவர் கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் பெர்சியாளுக்கும், செட்டுடையார்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதால் பெர்சியாள், கிருஷ்ணகுமாருடன் நெருங்கி பழகினார். இதில் அவர் கர்ப்பமானார். அதன் பின் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெர்சியாளுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை இறந்தது.
இதற்கிடையே பெர்சியா ளை பார்க்க வந்த கிருஷ்ணகுமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், மறந்து விடுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து பெர்சியாள், கிருஷ்ணகுமார் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலையிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.
இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.
பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.
- விருதுநகர் அருகே மில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலையம்பட்டி
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி குருநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டி (வயது 49). இவர் கட்டங்குடி செல்லும் சாலையில் பருப்பு மில் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று குட்டி தனது மில்லில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விருதுநகரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- மனிதவள மேம்பாட்டு நிறுவனர் விஜயகுமார் வரவேற்றார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியும், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது. மனிதவள மேம்பாட்டு நிறுவனர் விஜயகுமார் வரவேற்றார். மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, ராஜபாளையம் அலுவலர் ராஜேஷ், மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மாநில நுகர்வோர் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியம், மண்டல தலைவர் சேவுகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர்களை மேயர் சங்கீத இன்பம், கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிவக்குமார் வெளியிட்டனர். இயக்குனர் காசீஸ்வரி நன்றி கூறினார்.
- தனியார் நிறுவனத்தில் ரூ. 15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2020-ம் ஆண்டு செல்வர த்தினமும், அடுத்த ஆண்டு ஈஸ்வரியும் வேலையில் இருந்து விலகினர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் தெருவில் ஜேம்ஸ் கென்னடி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு இந்திரா நகரைச் சேர்ந்த செல்வரத்தினம் (38) விற்பனையாளராகவும், செட்டிக்குடி தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (38) என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணியாற்றினர். கடந்த 2020-ம் ஆண்டு செல்வர த்தினமும், அடுத்த ஆண்டு ஈஸ்வரியும் வேலையில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது செல்வர த்தினம், ஈஸ்வரி ஆகியோர் ரூ. 15 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரிடம் பணத்தை தருமாறு கேட்டபோது உரிய பதில் இல்லை. இதையடுத்து அந்த நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக செல்வரத்தினம், ஈஸ்வரி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- விருதுநகர் அருகே அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச்செயின் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பெரியதாதம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 68). இவர் சம்பவத்தன்று விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையத்திற்கு வந்த சுப்புலட்சுமி அங்கு நின்றிருந்த அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூடடம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் சுப்புலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தாலிச்செயினை நைசாக பறித்துக் கொண்டு தப்பினார். சூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சுப்புலட்சுமி தாலிச்செயின் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






