என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச்செயின் பறிப்பு
- விருதுநகர் அருகே அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச்செயின் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பெரியதாதம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 68). இவர் சம்பவத்தன்று விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையத்திற்கு வந்த சுப்புலட்சுமி அங்கு நின்றிருந்த அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூடடம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் சுப்புலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தாலிச்செயினை நைசாக பறித்துக் கொண்டு தப்பினார். சூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சுப்புலட்சுமி தாலிச்செயின் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story






