என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கலசலிங்கம் பல்கலைகழகத்தில் கணிணி பயன்பாட்டுத்துறை மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்.சி., சி.எஸ்.-ஐ.டி., எம்.எஸ்.சி. கணிணியியல் 2022-23 பேட்ச் மாணவர்களுக்கு நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைகழக 2022-23-ம் முதலாண்டு கணிணி பயன்பாட்டுத்துறை, பி.சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்.சி., சி.எஸ்.-ஐ.டி., எம்.எஸ்.சி. கணிணியியல் 2022-23 பேட்ச் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி தொடக்க விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த், 10 நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார். பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

    டீன் தீபலட்சுமி வரவேற்றார். ஈஸ்ட் இந்தியா கம்பெனி மேனேஜர் ஸ்டீபன் தினகரன், டி.சி.எஸ். ஐகான் மண்டல தலைவர் சுரேஷ்குமார், ஆலோசகர் சிபானி மொஹாபாத்ரா ஆகியோர் பேசினர்.

    துறைத்தலைவர் கார்த்தீபன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பிரதீப்கந்தசாமி,சதீஷ் குமார், அருண் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற 19-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி காப்பகத்தில் வசிக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடி 32 மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

    இதில் பங்கேற்ற மாணவி களிடம் கலெக்டர் மேகநாத ரெட்டி அவர்களுடைய ஆர்வம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார். பின்னர் கலெக்டர் பேசுகையில், இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழி களை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது உங்களை முழுமைப்படுத்தும். இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

    இதைவிட மிக முக்கியமானது நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களை சுற்றி உள்ள வர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலை யில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான வழிமுறைகள் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, வட்டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் வருகிற 29-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • இதில் பங்கேற்க வருகைதரும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விலை வாசியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொது ச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, நகரச்செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், சிவகா சிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டம் தி.மு.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், அமைப்புசாரா ஓட்டுநா் அணிமாவட்ட செயலாளா் சேதுராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், மிக்கேல்ராஜ், பேரவை சரவணன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவ ணன், பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மவுலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். அந்த காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் இன்று காலை 6 மணி அளவில் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள அக்ரஹாரப்பட்டியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி, அவரது மகன் மவுலி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் கண்ணன், கார் டிரைவர் குணசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அவர்களை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற தாய்-மகன் பலியான சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை தவிர்த்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • மாணவிகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், ரோசல்பட்டி ஊராட்சியில் பள்ளி செல்லா மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்து மீண்டும் பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக கலெக்டர் மேகநாதரெட்டி கள ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    அதன்படி, ரோசல்பட்டி ஊராட்சியில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், ஆர்த்தி (7-ம் வகுப்பு), அழகுலட்சுமி (7-ம் வகுப்பு), காவியா (8-ம் வகுப்பு) லட்சுமி பிரியா (12-ம் வகுப்பு), பவித்ரா (10-ம் வகுப்பு) கார்த்திகைச்செல்வி (6-ம் வகுப்பு), சுப்புலட்சுமி (10- ம் வகுப்பு) ஆகிய மாணவிகள் பள்ளி செல்லாமல் இருந்தனர்.

    அந்த மாணவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சந்தித்து, பள்ளி செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், படித்ததால் தான் நாங்கள் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறோம் என்றும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாணவிகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவ ட்டத்தில், விருதுநகர், வெம்ப க்கோட்டை, ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் முதல் கட்டமாக 1032 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் கல்வி பயில்வதற்கு மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கலெக்டர் மேகநாதரெட்டி. தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரச குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ராமு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.

    அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் கலந்து ராமுவும் அவரது மனைவி யும் அதனை பயிர்களுக்கு தெளிக்க சென்று விட்டனர். காலி பாட்டிலை அப்புறப்படுத்தாமல் ராமு அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரி கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரி கிறது.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு உடனே காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறு சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சனா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர் அஜாக்கிர தையாக இருந்ததால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தி.மு.க. விளம்பர ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
    • தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஸ் நிலையம் அருகே விருதுநகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழுக்கு மரியாதை செய்தவர் தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் விருதுநகர் சங்கரலிங்க நாடார். உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத்தை மதித்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் அண்ணா. கருணாநிதி தனது குடும்ப நலனுக்காக கட்சியை கைப்பற்றினார். தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலினை சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை.

    சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.379 கோடியில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி, ரூ447 கோடியில் விருதுநகர்-அருப்புக்கோட்டையில் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், வத்திராயிருப்பில் புதிய தாலுகா அலுவலகம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பல கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டது. ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி உள்ளது. தி.மு.க. ஆட்சி விளம்பர ஆட்சி. இது நிரந்தரமாகாது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும். நீங்கள் அ.தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயி னார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன், யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பணப்பாண்டி (வயது 43). தி.மு.க. நிர்வாகி யான இவர் விருதுநகர் நகராட்சியில் 35-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உறவினர் கைது

    சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது அதே பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் பணப்பாண்டியின் உறவினர் காளீஸ்குமார் (38) என தெரியவந்தது. தேர்தல் பிரச்சினையில் காளீஸ் குமார் இதில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • விருதுநகரில் 26-ந் தேதி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC - CGL Group – B மற்றும் Group – C ) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (04562-293613) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வடமலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.1.45 லட்சம் மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள வீட்டினையும், செங்க மலப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் சத்துண வுக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.23.57 லட்சம் மதிப்பில் நாரணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், சித்துராஜபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதுக்குளம் கண்மாய் பணிகளையும், க.க.ச. மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்விராஜ், உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டா ட்சியர் லோகனாதன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், ராம மூர்த்தி மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

    • அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்தனர்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் வடக்கு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செண்பக ரத்தினம் (வயது 68). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில்நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் செண்பகரத்தினம் வீட்டின் ஓட்டை பிரிந்து உள்ளே இறங்கி உள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த செண்பகரத்தினம் கழுத்தை நெரித்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தில் வசிப்ப

    வர்கள் அங்கு வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து அருப்பு க்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

    அருப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே அருப்புக்கோ ட்டை போலீசார் தினமும் இரவு ரோந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலை யிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

    இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.

    பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.

    ×