என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
- கலசலிங்கம் பல்கலைகழகத்தில் கணிணி பயன்பாட்டுத்துறை மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
- சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்.சி., சி.எஸ்.-ஐ.டி., எம்.எஸ்.சி. கணிணியியல் 2022-23 பேட்ச் மாணவர்களுக்கு நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைகழக 2022-23-ம் முதலாண்டு கணிணி பயன்பாட்டுத்துறை, பி.சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்.சி., சி.எஸ்.-ஐ.டி., எம்.எஸ்.சி. கணிணியியல் 2022-23 பேட்ச் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி தொடக்க விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த், 10 நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார். பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
டீன் தீபலட்சுமி வரவேற்றார். ஈஸ்ட் இந்தியா கம்பெனி மேனேஜர் ஸ்டீபன் தினகரன், டி.சி.எஸ். ஐகான் மண்டல தலைவர் சுரேஷ்குமார், ஆலோசகர் சிபானி மொஹாபாத்ரா ஆகியோர் பேசினர்.
துறைத்தலைவர் கார்த்தீபன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பிரதீப்கந்தசாமி,சதீஷ் குமார், அருண் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story






