இலவச பயிற்சி வகுப்புகள்

விருதுநகரில் 26-ந் தேதி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இலவச பயிற்சி வகுப்புகள்
Published on

விருதுநகர்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC - CGL Group – B மற்றும் Group – C ) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (04562-293613) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com