என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவர் தினமும் இரவில் அலுவலகத்திலேயே தூங்குவது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வாசலில் கட்டிலில் தூங்கி னார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கார்மெண்ட்சுக்குள் நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த விக்னேஷ் யார் என்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். மறுநாள் இரவும் விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வெளியே தூங்கினார்.

    நள்ளிரவு அங்கு வந்த முகமூடி நபர்கள் 2 பேர் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணை குண்டை எடுத்து வீசி விட்டு தப்பினர். இதில் கட்டிலில் பட்டு அவை வெடித்தன. இதில் அதிர்ஷ்வசமாக விக்னேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் கட்டில் எரிந்து நாசமானது.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரண மாக விக்னேசை கொல்ல முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 150 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கடத்தல்காரர்களை கைது செய்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலமாக ரேசன் அரிசி கடத்தல் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தும் மாபியாக்கள் அதனை ஆலைகளிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் கிராமப்புற மக்க ளுக்கு ரேசன் அரிசி, பொது விநியோக பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.

    ரேசன் அரசி கடத்தலை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் கடத்தலை தடுக்க முடிய வில்லை.

    நாள்தோறும் மோட்டார் சைக்கிள், சரக்கு வேன், லாரிகளில் மூடை மூடை யாக ரேசன் அரிசிகள் கடத்தி அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    விருதுநகர், தென்காசி மாவட்ட சோதனை சாவடி களிலும் போலீசார் கண்டு கொள்ளாததால் கடத்தில் சம்பவங்கள் நடந்து வரு கின்றன.

    விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதங்க ளில் 150 டன் கடத்தல் ரேசன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 170பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பெரும்பாலானோர் டிரைவர், கிளினீர்கள் மட்டும்தான். இதற்கு மூளையாக செயல்படும் கடத்தல்காரர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதன் காரணமாக கடத்தல்கள் அன்றாடம் நடந்து வருகின்றன.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு பொதுமக்களுக்காக குறைந்த விலையில் ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

    ஆனால் இவை பொது மக்களுக்கு சரியாக விநி யோகம் செய்யாமலும், எடையை குறைத்து விநியோ கிப்பதாலும் அதன் மூலம் பதுக்கப்படும் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. நகர் புறங்களில் ரேசன் அரிசிகள் பெரும்பாலான பொதுமக்கள் வாங்குவ தில்லை.

    ஆனால் அந்த ரேசன் கார்டுதாரர்கள் அரிசி வாங்கியதுபோல் பதிவு செய்து அதில் பதுக்கப்படும் அரிசிகள் ஆலைகளுக்கு கடத்தப்படுகிறது. தற்போது கோதுமை,பருப்பு, சீனி உள்ளிட்டவையும் கடத்தப்படுகிறது.

    கடத்தப்படும் ரேசன் அரிசி ஆலைகளில் பாலிஸ் செய்யப்பட்டு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்து கொள்ளைலாபம் ஈட்டுகின்றனர். எனவே கடத்தல்காரர்களை கைது செய்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றனர்.

    • மாநில தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
    • காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் வசந்தகுமார் திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் இவர் ''போல் வால்ட்'' எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் 2-வது பரிசு பெற்றார். இவரை பாராட்டும் வகையில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

    கிராம எல்லையில் இருந்து மாணவர் வசந்தகுமார் உடற்உகல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோரை மாலை அணிவித்து பள்ளிச் செயலாளர் பாலாஜி நாடார், தலைவர் லட்சுமண நாடார், உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர்-சங்கத் தலைவர் தர்மராஜ் நாடார், உறவின்முறை தலைவர் ராமசாமி நாடார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் நாடார், செயலாளர் கள்ள கொண்ட ராஜன் நாடார், கணக்கர் முத்தையா நாடார் ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர்.

    பள்ளியில் நடந்த பாராட்டு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்தது.
    • பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் உலக மண் தினத்தினை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழி கண்காட்சி நடைபெற்றது.

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி. குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அதற்கான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

    அதனடிப்படையில், ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கான மாற்றுவழி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறும்.இதில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு பதிலான மாற்று பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சி முதன்முத லாக ராஜபாளையம் நகராட்சியில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நடத்தப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலான விஷயமாகும். அதனால் பொதுமக்கள் அதனை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கி நகராட்சிக்கு உதவிட வேண்டும்.

    மேலும் பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி, சுற்றுப்புறச்சூழலை காத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜ பாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருப்பூர் பாதுகாப்பு சங்கம் நிறுவன செயலாளர் வீரபத்மன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் காளி, பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லி. லயன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்துர்

    தமிழ்நாடு ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. போட்டிகளில் ஸ்ரீவில்லி புத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    சைக்கிளிங் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்க

    ளுக்கான பிரிவில் லயன்ஸ் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் அறிவுப்புகழேந்தி முதல் பரிசும், கிருஷ்ணசாமி 3-ம் பரிசும் பெற்றனர். மாணவி களுக்கான போட்டியில் லயன்ஸ் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி தீபிகா 2-ம் இடம் பெற்றார்.

    14-வயதுக்குட்பட்ட போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் சுஜன் 2-ம் இடம் பெற்றார். 16-வயதுக்குட்ட போட்டியில் மாணவி சுவாதிகா முதல் பரிசு பெற்றார். 18-வயதுக்குட்ட போட்டியில் 11-ம் வகுப்பு மாணவன் ஆனந்த் 3-ம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளிக்குப் பெருமையைத் தேடித் தந்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ், சக்திவேல், பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு களைத் தெரிவித்தனர்.

    • மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. (ஜி.டி.) மற்றும் எஸ்.எஸ்.சி. (சி.எஸ்.எஸ்.எல்.) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 45000 பணிக்காலி யிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வருகிற 5-ந் தேதி அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெற உள்ளது.

    மேலும் இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்ற 1 லட்சம் பேர் பெற்றனர்.
    • தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 3-ம் கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடந்தது. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் படிக்க மற்றும் எழுதத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கிட வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்டத்தின் முதன்மையான இலக்காகும்.

    இதனை கருத்தில் கொண்டு "வளர்ச்சியில் முன்னுரிமை பெறும்" விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட 3-ம் கட்டத்தின் கீழ் பயின்று வரும் அனைத்து கற்போர்களும் அடிப்படை எழுத்தறிவு தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் இத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 25 ஆயிரத்து 15 பேரும், 2-ம் கட்டமாக 45 ஆயிரத்து 792 பேரும் எழுத்தறிவு பெற்றனர்.

    தற்போது 3-ம் கட்டமாக ஜூன் 2022 முதல் நவம்பர் 2022 வரை 6 மாதங்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்க ளில் 29 ஆயிரத்து 941 பயனாளிகளுக்கு படிக்க எழுத கற்று தரப்பட்டு இத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த 3 கட்ட எழுத்தறிவுத் திட்டத்திற்காக அரசு ரூ.3 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 959 செலவு செய்துள்ளது.

    தேர்வு விடைத்தாள்கள் வட்டார வளமையத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டு, ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களால் டிசம்பர் 6-ந் தேதி முதல் 10 ம் தேதி வரை மதிப்பீடு செய்யப்படும். மதிப்பெண்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 60 சதவீதத்திற்கு மேல் எனில் நன்று என 'ஏ' கிரேடும், 40-60 சதவீதம் எனில் திருப்திகரம் என 'பி' கிரேடும், 40 சதவீதத்திற்கு கீழ் எனில் முன்னேற்றம் தேவை என 'சி' கிரேடும் சான்றிதழ் வழங்கப்படும்.

    மாவட்டத்தில் இத் திட்டத் தின் கீழ் 1 லட்சத்து 748 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இலக்கை விட கூடுதலாக 1 லட்சத்து 798 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தரப்பட்டுள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின்படி மாவட்டத்தில் 749 மையங்களிலும் இத் தேர்வு மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசில் புகார் கூறிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் உமாதேவி(வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார்(35)என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    செந்தில்குமார் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழந்து வருகின்றனர்.

    தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் உமாதேவி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த இரு வழக்குகளும் கோர்ட்டில் நடந்து வருகின்றன. இந்நிலையில் செந்தில்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவல் உமாதேவிக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது மீது மகளிர் போலீஸ் நிலையத்தில் உமாதேவி புகார் செய்தது செந்தில்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தனது தாய் ராஜம்மாளுடன், உமாதேவி வீட்டிற்கு சென்று மகளிர் போலீசில் புகார் கொடுத்தது குறித்து கேட்டு தகராறு செய்தார்.

    இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செந்தில்குமார் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் சேர்ந்த உமாதேவியை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், தனது கணவர் மற்றும் மாமியார் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். செந்தில்குமார், அவரது தாய் ராஜம்மாள் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. அரசன் மாடல் பள்ளியும், தனியார் நிறுவனமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பள்ளி தாளாளர் அசோகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அறிவரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் தினேஷ்குமார், ரவி, சுப்பிரமணியன், சிவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம் இனி வரும் காலங்களில் அரசன் மாடல் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், சிவகாசி மற்றும் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    • இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், நடைபெற்றது. அப்போது அவர் ேபசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.

    அதன்படி, வருகிற 5-ந் தேதி அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொது மக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பலியானார்.
    • 2 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மலை யடிப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது21). இவர் நேற்று மாலை தனது நண்பர் சரவணக்குமாரை அழைத்து கொண்டு குற்றாலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ராஜபாளையம்-தென்காசி சாலையில் தளவாய்புரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த மைல்கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரமேஷ், சரவணகுமார் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அப்பகுதியை சேர்ந்த வர்கள் 2 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரமேஷ் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரேசன்கடையில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள்-18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு 15-ந் தேதி முதல் நடக்கிறது.
    • 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற ப்பட்டுது.

    அவை பரிசீ லிக்கப்பட்டு, தற்காலி கமான தகுதியான விண்ண ப்பதாரர்க ளுக்கான நேர்முக தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பின்புறம் உள்ள அரசு தொழில் மற்றும் பட்டாசு மையத்தில் நடைபெற உள்ளது.

    எனவே நேர்முக தேர்விற்கான அனுமதி சீட்டு விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி www.vnrdrb.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு தபால்வழி அனுப்பி வைக்கப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    ×