என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- 108 வைணவத் திருத்தலங்களில் இந்த கோவில் முக்கியமான திருத்தலமாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமான திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதி பெரிய கோபுரம் வாசல் முன்பும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று 2 இடங்களிலும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆண்டாள் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிவானந்தா ஆசிரமத்தில் அன்னதானம் நடந்தது.
- சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு நடந்தது.
ராஜபாளையம்
சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அய்யனார் கோவிலில் அருகே உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் மகா அன்னதானம் நடந்தது.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சித்தவித்தியார்த்திகள் கலந்து கொண்டு சுவாமி சிவானந்த பரமஹம்சரின் அருளுரைகளை எடுத்துக் கூறினர்.
விழா ஏற்பாடுகளை கார்த்திகை விழா கமிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்தது.
- இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் பள்ளி சிறுவர்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி குருசேகரத் தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நடந்தது. ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார்.
பள்ளி சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களை பாடி, குறு நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தின் இளையோர் திருச்சபை இயக்குநர் கிதியோன் சாம் தேவ செய்தியளித்தார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் நிர்மலா குலோத்துங்கன் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. வடக்குதெரு, நாயுடு தெரு, நடுத்தெரு, திலகாபுரி தெரு, பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தார். சபை குருவானர் அருள்தனராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார்.
இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் வேதாகம தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபை போதகர் பரிசு வழங்கினார். கிறிஸ்மஸ் கீத பவனி வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து குடும்ப கீத ஆராதனை, ஐக்கிய சங்கங்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
- சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.
ராஜபாளையம்
ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வழிபாடு நடந்தது. அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார்.
என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜாவின் சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.
நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.
- விருதுநகரில் உள்ள 200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஸ்டெப்லைசர், பென்டி ரைவ் போன்றவற்றையும் கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்
விருதுநகர்
விருதுநகர் வட்டம், கருப்பசாமி நகர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்யும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 இன்ச் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேகநாதரெட்டி கலந்து கொண்டு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்தின் சிறந்த செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஆயோக் ஜிகா நிதியை பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மைய குழந்தைகளின் முன்பருவ கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் 200 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதையொட்டி ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 இன்ச் ஸ்மார்ட் டிவி, ஸ்டெப்லைசர், பென்டி ரைவ் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் அருகே நடந்த விபத்தில் தனியார் நிறுவன மேலாளர்- மூதாட்டி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- சிவகாசி டவுன், திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
திருத்தங்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு வந்த துரைப்பாண்டி மதியம் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ரெயில்வே பீடர் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த துரைப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சம்பவத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார். கிருஷ்ணன் கோவிலில் உள்ள கண் ஆஸ்பத்திரி முன்பு பாண்டியம்மாள் நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஸ்ரீகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஜெயலலிதா நினைவுநாளில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
- ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிவகாசி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற அபினேஷ்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நகர (வடக்கு) செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், நகர (தெற்கு) செயலாளர் பரமசிவம், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என். பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ரதத்துடன் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக ஜவகர் மைதானத்தை சென்றடைந்தது.அங்கு அம்மா உணவகம் அருகில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் வி.எஸ்.ராஜா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, வனராஜ், நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வள்ளியம்மாள், மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி ஆந்திராகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக சென்னை- செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, செங்கோட்ட- மயிலாடுதுறை, வேளாங்கண்ண-எர்ணாகுளம், சென்னை- கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக தினசரி 6 ெரயில்கள் செல்கிறது. பொதுமக்கள் ஆட்டோ மூலம் ெரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியூர் பயணிகள் நீதிமன்றம் சென்று அங்கிருந்து ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல், கிருஷ்ணப்பேரி, அச்சங்கு ளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை தேரடி, நகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகம், ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ெரயில் பயணிகள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம் செல்லும் மக்களும் பயனடைவர். இதனால் நகர பஸ்களை ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது.
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறிச்செல்ல ஏற்கனவே வனத்துறையினர் அனுமதி அளித்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ராஜபாளையத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- இக்கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகர் தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
வருகிற 8-ந் தேதி ராஜபாளையத்திற்கு வரும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம், நகர் செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் இளங்கோவன், துணை சேர்மன்கள் துரைகற்பகராஜ், கல்பனா குழந்தைவேலு, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ராஜை, கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மொபட் மீது அரசு பஸ் மோதி கொத்தனார் தலை நசுங்கி பலியானார்.
- அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(வயது27). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று ராஜ பாளையம் பி.டி.ஆர். நகர் பகுதியில் இவரது நண்பர் விக்னேசின் திரும ணத்திற்காக மொபட்டில் சென்றுள்ளார்.
திருமணம் முடித்து இவரும், இவரது மற்றொரு நண்பர் முனீஸ்வரன்(26) என்பவரும் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை இடையன்குளத்தை சேர்ந்த முத்து என்பவர் ஓட்டி வந்தார்.சத்திரப்பட்டி சாலையில் உள்ள மில் கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே மொபட் வந்தபோது, அரசு பஸ் மோதியது. இதில் முருகன் தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் முருகனின் நண்பரான முனீஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மழை பெய்யாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- இன்று கார்த்திகை மாத பிரதோஷம் ஆகும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) கார்த்திகை மாத பிரதோஷம் ஆகும். கார்த்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மழை பெய்யாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்தர்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து கோவிலுக்கு வர வேண்டுமெனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.






