கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.
கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் பள்ளி சிறுவர்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி குருசேகரத் தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நடந்தது. ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார்.

பள்ளி சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களை பாடி, குறு நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தின் இளையோர் திருச்சபை இயக்குநர் கிதியோன் சாம் தேவ செய்தியளித்தார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் நிர்மலா குலோத்துங்கன் நன்றி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. வடக்குதெரு, நாயுடு தெரு, நடுத்தெரு, திலகாபுரி தெரு, பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தார். சபை குருவானர் அருள்தனராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார்.

இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் வேதாகம தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபை போதகர் பரிசு வழங்கினார். கிறிஸ்மஸ் கீத பவனி வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து குடும்ப கீத ஆராதனை, ஐக்கிய சங்கங்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com