என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கள்ளக்காதலி வீட்டில் பூக்கடைக்காரர் தூக்கில் தொங்கினார்.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே முள்ளிசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 50), பூக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமி (48). சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி முத்துலட்சுமி அதுபற்றி விசாரிக்கும்போது, கீழே விழுந்து விட்டதாக கூறி உள்ளார்.

    ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக மனைவி கூறியபோது, அதை மறுத்து விட்டு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் லட்சுமி வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் வாலிபரை மைத்துனர் குத்தி கொன்றார்.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவடடம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 32), கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்க ளுக்கு 2 குழந்தை கள் உள்ளனர். அன்னலட்சுமி யின் தாயார் சுந்தரி (42), தம்பி பொன்ராஜ் (20) ஆகியோரும் அதே தெருவில் வசித்து வருகின்றனர்.

    காமராஜூக்கும், அன்ன லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது பொன்ராஜ் அவர்களது வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பார். இது காமராஜிக்கு பிடிக்கவில்லை. அதனால் தன் குழந்தைகளுடன் பொன்ராஜ் விளை யாடும்போது கோபமாக பேசி சண்டை போடுவார்.

    இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளுடன் பொன்ராஜ் விளையாடி கொண்டிருந்தபோது காமராஜ் வழக்கம்போல் சண்டையிட்டுள்ளார்.

    அப்போதும் ஆத்திரத்தில் இருந்த காமராஜ் இரவு 9.30 மணி அளவில் பொன்ரா ஜின் வீட்டுக்கு சென்று தக ராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்தி ருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி உள்ளார். இதில் நிலைகுலைந்த பொன்ராஜை உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக பொன்ராஜின் தாயார் சுந்தரி கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாக தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் தெரிவித்தன.
    • கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ராஜபாளையம்

    அரசு மகப்பேறு மருத்து வமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் இரு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மகப்பேறு சிகிச்சை யின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லக்சயா திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நேஷனல் ஹெல்த் அத்தாரிட்டி சார்பில் தேசிய தர சான்றிதழ் வழங்கப்படு கிறது.

    இந்த ஆய்வு குறித்து தேசிய தர மதிப்பீட்டு குழு வினர்களான டாக்டர்கள் பரீத் உத்தின், ஜேயெஸ் பட்டேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமாக மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார கிரா மப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ஆய்வு முடிவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மதிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொல்லை தொடர்பாக சரண்யா மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் பணிபுரிகின்றனர். அங்கு வரவேற்பாளராக பெண் போலீஸ் சரண்யா (வயது 28) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரனுக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் மற்றும் போலீஸ்காரர் கண்ணன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீது விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்துள்ளார்.

    • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் 35 வது பேட்ச் டி.பார்ம், 31-வது பேட்ச் பி.பார்ம், 7- வது பேட்ச் பார்ம் டி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி செயலாளர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் ஜெகநாத் பிரபு ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு மருந்தியல் துறையின் எதிர்காலம் குறித்து பேசினர்.

    அரவிந்த் ஹெர்பல் லேப் நிர்வாக இயக்குநர் பரத்ராஜ், மெட் பிளஸின் சீனியர் மேனேஜர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவமனை டீன் சேவியர் செல்வா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் ,மெட் பிளஸ், அரவிந்த் ஹெர்பல் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

    ராஜபாளையம்

    மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால் விலை, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி,மின் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்ப டவில்லை. ஆனால் இன்று குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரியையும் உயர்த்தி உள்ளனர்.மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

    பொதுமக்களின் அன்றாட பிரச்சினை குறித்தும், மின் கட்டண உயர்வு குறித்தும் தெரியாமல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்ப தமிழன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில் சிறந்த கற்பித்த லுக்கான பயிலரங்கம் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமையு தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு பிடித்த வகையில் கற்பிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மாணவர்களுக்கு நனவு மனம், நனவிலி மனம் ஆகிய 2 வகையான மனநிலை உள்ளது. எதிர்மறையாக பேசக்கூடிய வார்த்தைகள் அவர்களது நனவிலி மனதில் பதிவாகி சிந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே மாணவர்களிடம் பேசும் போது நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும். வகுப்பில் சுற்றுச்சூழல் சார்ந்த நடப்பியல் நிகழ்வு களை சான்று காட்டி கற்பிக்க வேண்டும். பாடத்தைத் திணிக்காமல் அவர்களாகவே விரும்பிப் படிக்கும் அளவுக்கு கற்பிக்க வேண்டும். கற்பித்தல் ஒரு கலை ஆகும். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

    உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளரும், கணினி அறிவியல் துறைத் தலை வருமான பிரியா வரவேற்றார்.

    உயிரித்தொழில் நுட்ப வியல் மற்றும் தாவரவியல் துறைகளின் தலைவர் சுஜாதா நன்றி கூறினார். இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் மழை பெய்தும் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டனூர், சீனியேந்தல், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய காரணத்தினால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.

    தற்போது நெல் பரிச்சல் ஏற்படும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் நரிக்குடி அருகே உள்ள சீனியேந்தல், கட்டனூர் காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளம், எஸ்.கடமங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ளவிவசாய நிலங்களில் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து காவிரி, வைகை, கிருமால் நதி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மச்சேசுவரன் கூறியதாவது:-

    நரிக்குடி பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு கண்மாயும் நிரம்பாத நிலையில் இருந்து வந்தது. கடந்த 2,3 வருடங்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதற்கு பின்பு வயல் பகுதியில் சீமைகருவேல் மரங்கள் அடர்ந்திருந்ததை அப்புறப்படுத்தி நெல் நடவு செய்து உள்ளனர்.

    விவசாயிகள் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம்

    தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.

    ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

    தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.

    • விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.135.30 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் கடன் தேவை யுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1)சிட்டா, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் 2 புகைப்படம் ஆகிய வற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்க டன்கள் பெறலாம்.

    கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் அருகே டிரைவரை தாக்கி ரூ.1½ லட்சம் வழிப்பறி வழிப்பறி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டி திருமலாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 43), லாரி டிரைவர்.

    இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுரண்டை, பாவூர்சத்திரம் பகுதியில் சப்ளை செய்துள்ளார். அதில் கிடைத்த பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துடன் ராஜபாளையம் நோக்கி திரும்பி வந்துள்ளார்.

    அப்போது இயற்கை உபாதைக்காக சாலை யோரம் லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அந்த பகுதியில் நின்றிருந்த திருநங்கைகள் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக ராம்குமார், முகவூர் பாம்பலம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவஞ்சி (21) உள்ளிட்ட 3 திருநங்கைகள் மீது ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தை வருகிற ஏப்ரல் மாதம் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத் தினார்.

    அப்போது அவர் கூறுகையில், ''பாலத்தின் கீழ் பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி முடிவடைந்து விட்டது. இன்னும் 2 வாரங்களில் அந்த பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடங்கும். மேம்பால பணிகள் முடுக்கிவிடப்பட்டு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    பணிகள் விரைந்து முடிக்கப்படும். வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்'' என்றார்.

    இதில் உதவி பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பாஸ்கரன், கூட்டுறவு வங்கி தலைவர் ராதா கிருஷ்ணராஜா, ஜெயராஜ், செந்தில் மாரிமுத்து, மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×