வாலிபரை குத்தி கொன்ற மைத்துனர்

குடும்ப தகராறில் வாலிபரை மைத்துனர் குத்தி கொன்றார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.
வாலிபரை குத்தி கொன்ற மைத்துனர்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவடடம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 32), கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்க ளுக்கு 2 குழந்தை கள் உள்ளனர். அன்னலட்சுமி யின் தாயார் சுந்தரி (42), தம்பி பொன்ராஜ் (20) ஆகியோரும் அதே தெருவில் வசித்து வருகின்றனர்.

காமராஜூக்கும், அன்ன லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது பொன்ராஜ் அவர்களது வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பார். இது காமராஜிக்கு பிடிக்கவில்லை. அதனால் தன் குழந்தைகளுடன் பொன்ராஜ் விளை யாடும்போது கோபமாக பேசி சண்டை போடுவார்.

இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளுடன் பொன்ராஜ் விளையாடி கொண்டிருந்தபோது காமராஜ் வழக்கம்போல் சண்டையிட்டுள்ளார்.

அப்போதும் ஆத்திரத்தில் இருந்த காமராஜ் இரவு 9.30 மணி அளவில் பொன்ரா ஜின் வீட்டுக்கு சென்று தக ராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்தி ருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி உள்ளார். இதில் நிலைகுலைந்த பொன்ராஜை உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக பொன்ராஜின் தாயார் சுந்தரி கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com