search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினை கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் பொன்னாடை வழங்கி வரவேற்றார். அருகில் 29-வது வார்டு தி.மு.க. நிர்வாகிகள் மகேசுவரன், முனியராஜ் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை

    • ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம்

    தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.

    ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

    தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.

    Next Story
    ×