search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே மேம்பாலம் திறந்து வைக்க மு.க.ஸ்டாலின் வருகை
    X

    ரெயில்வே மேம்பால பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரெயில்வே மேம்பாலம் திறந்து வைக்க மு.க.ஸ்டாலின் வருகை

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தை வருகிற ஏப்ரல் மாதம் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத் தினார்.

    அப்போது அவர் கூறுகையில், ''பாலத்தின் கீழ் பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி முடிவடைந்து விட்டது. இன்னும் 2 வாரங்களில் அந்த பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடங்கும். மேம்பால பணிகள் முடுக்கிவிடப்பட்டு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    பணிகள் விரைந்து முடிக்கப்படும். வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்'' என்றார்.

    இதில் உதவி பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பாஸ்கரன், கூட்டுறவு வங்கி தலைவர் ராதா கிருஷ்ணராஜா, ஜெயராஜ், செந்தில் மாரிமுத்து, மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×