search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hit by a bus"

    • வேணுகோபால் வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
    • தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கடலூர்: 

    வடலூர் கோபியார் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது இல்லத்திலிருந்து பெத்தணாங்குப்பம் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.


    அப்போது சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்ல முயற்றி செய்த போது, பின்புறமிருந்து வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வடலூர் போலீசார் உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேணுகோபாலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மொபட் மீது அரசு பஸ் மோதி கொத்தனார் தலை நசுங்கி பலியானார்.
    • அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(வயது27). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று ராஜ பாளையம் பி.டி.ஆர். நகர் பகுதியில் இவரது நண்பர் விக்னேசின் திரும ணத்திற்காக மொபட்டில் சென்றுள்ளார்.

    திருமணம் முடித்து இவரும், இவரது மற்றொரு நண்பர் முனீஸ்வரன்(26) என்பவரும் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை இடையன்குளத்தை சேர்ந்த முத்து என்பவர் ஓட்டி வந்தார்.சத்திரப்பட்டி சாலையில் உள்ள மில் கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே மொபட் வந்தபோது, அரசு பஸ் மோதியது. இதில் முருகன் தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் முருகனின் நண்பரான முனீஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×