மொபட் மீது பஸ் மோதி கொத்தனார் பலி

மொபட் மீது அரசு பஸ் மோதி கொத்தனார் தலை நசுங்கி பலியானார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மொபட் மீது பஸ் மோதி கொத்தனார் பலி
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(வயது27). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று ராஜ பாளையம் பி.டி.ஆர். நகர் பகுதியில் இவரது நண்பர் விக்னேசின் திரும ணத்திற்காக மொபட்டில் சென்றுள்ளார்.

திருமணம் முடித்து இவரும், இவரது மற்றொரு நண்பர் முனீஸ்வரன்(26) என்பவரும் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை இடையன்குளத்தை சேர்ந்த முத்து என்பவர் ஓட்டி வந்தார்.சத்திரப்பட்டி சாலையில் உள்ள மில் கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே மொபட் வந்தபோது, அரசு பஸ் மோதியது. இதில் முருகன் தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் முருகனின் நண்பரான முனீஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com