மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 70 வயது முதியவர் உடல் நசுங்கி சாவு

வேணுகோபால் வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 70 வயது முதியவர் உடல் நசுங்கி சாவு
Published on

கடலூர்: 

வடலூர் கோபியார் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது இல்லத்திலிருந்து பெத்தணாங்குப்பம் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்ல முயற்றி செய்த போது, பின்புறமிருந்து வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வடலூர் போலீசார் உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேணுகோபாலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com