ராமச்சந்திர ராஜா நினைவிடத்தில் மலரஞ்சலி

என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.
ராமச்சந்திர ராஜா நினைவிடத்தில் மலரஞ்சலி
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வழிபாடு நடந்தது. அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார்.

என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜாவின் சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.

நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com