search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chokkapani"

    • சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால் அதுவும் வெடித்தன.
    • மேலும், அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    கார்த்திகை தீபத்திரு நாளை முன்னிட்டு நேற்று மாலை தஞ்சாவூர் பெரிய கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பெருவு டையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.

    மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன.

    சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர்.

    மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    • கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 27-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது.

    திருச்சி

    கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 27-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று நடைபெற்றது. சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    இந்நிகழ்ச்சியில் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 108 வைணவத் திருத்தலங்களில் இந்த கோவில் முக்கியமான திருத்தலமாகும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமான திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதி பெரிய கோபுரம் வாசல் முன்பும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று 2 இடங்களிலும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆண்டாள் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×