என் மலர்
விருதுநகர்
- 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
- மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 7-ந் தேதி மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களை சதுரகிரிக்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேன்சி ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடிக்க தொடங்கின.
- சிறிது நேரத்தில் அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வி.ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று தயாரிக்கப்பட்ட பேன்சி ரக வெடிகள் ஆலையில் உள்ள அறையில் ஊழியர்கள் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் பேன்சி ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடிக்க தொடங்கின. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அறையில் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பட்டாசு வெடிவிபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார்.
- இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் சோலைச்சேரி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது54) இவர் ராஜபாளையம் -தென்காசி சாலையில் சித்தாபுரம் விலக்கு பகுதியில் மாட்டு தீவனம் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு ரோட்டில் நடந்து சென்றார். அவர் சேத்தூர் புறக்காவல் நிலையம் முன்பு வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் மாரியப்பனும், மோட்டார் சைக்கிளில் வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்த கற்பகராஜ்(30)என்ற வாலிபரும் படுகாயம் அடைந்தனர்.
மாரியப்பனை சேத்தூர் போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கற்பக ராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேத்தூர் புறகாவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென்மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
- போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி காளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென்மா வட்டத்தை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 38 அணிகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் நெல்லை எம்.என்.எம். அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபா ளையம்,ஆர்.சி.மீ னாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நி லைப்பள்ளி அணியும் முதலிடத்தை பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
- கட்டுமான பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இதுகுறித்து முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது53). மத்திய அரசு ஒப்பந்ததாரராக உள்ளார்.
இவரது உறவினரான சிவகாசி கெங்காகுளத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற ஏ.கே.சாமி என்பவர் சென்னை ஊனமுற்றோர் கல்லூரியில் நிர்வாக பொறியாளராக உள்ளார். அவர் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்தால் அதற்குரிய பணத்தை கொடுத்து விடுவதாக முருகனிடம் கூறியுள்ளார்.
கருப்பசாமி மத்திய அரசு பணியில் இருப்பதால் அவர் மூலமாக டெண்டர் கிடைக்கும் என்று கருதி வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல், சிமெண்டு, கம்பி என ரூ.16 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை முருகன் வாங்கி கொடுத்தார். அதற்குரிய பில்லை கொடுத்த பின்னர் கருப்பசாமி பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து வன்னியம்பட்டி போலீசார் கருப்பசாமி மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 10-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: 25.6.2012-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.
இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்ட வேலை அட்டைகோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நாளது வரை 5 ஆயிரத்து 170 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் வகையில் பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (1-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குள்ளகவுண்டன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த வர் சரவ ணன்(வயது38). இவரது மனைவி கற்பக வள்ளி. இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து ஏழாயிரம்பண்ணையில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இந்த நிலையில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணன் புகார் செய்தார். அதில் ரவிக்குமார் என்பவர் தனது மனைவிக்கு பழக்கம் இருந்ததாகவும், அவர் அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் திருவேட்டை(56), பட்டாசு தொழிலாளி. மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் வீரபெருமாள்(23). கட்டிடத்தொழிலாளியான இவர் வேலைக்காக ராஜபாளையம் சென்றார். இரவு 10 மணிக்கு உணவு சாப்பிட்டு கொண்டிருப்பதாக தந்தையிடம் போனில் தெரிவித்தார். அதன் பின்னர் போன் அணைந்து விட்டது.அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து தங்கவேல் விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வீரபெருமாளை தேடி வருகின்றனர்.
- பட்டாசு விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
- இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தனியார் கல்லூரி யில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடுகளை கலெக்டர் வெளியிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபு ணர்களை கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் பாது காப்பான உற்பத்தி முறையை கையாளுதல் தொடர்பாக, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதையடுத்து விருதுநகர் மற்றும் சிவகாசி கோட்டங்க ளில் 28 விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இன்று முதல் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள், கருத்த ரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 50 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதரத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும். நாட்டின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழி லாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
எனவே இந்த கருத்த ரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் பட்டாசு விபத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவ டிக்கைகளுக்கும் பட்டாசு தொழிலாளர்கள், உறு துணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் இணை இயக்குநர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேல்முருகன் (விருதுநகர்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
- இவர் செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது தெரியவந்தது.
மதுரை
மதுரையில் வாலிபர் ஒருவர் அத்துமீறி வீடு புகுந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பி சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரணீத், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனை பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சம்பவத்தன்று மாலை 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப் பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அவர் தான் என தெரியவந்தது. மேலும் அவர் மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது31), செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கருப்பசாமியை மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.
தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.
உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.
இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
- ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன், அரவிந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ரோட்டரி சங்கத் தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார்.
துணை ஆளுனர் சத்யா குமரேசன் தொடங்கி வைத்தார். பட்டயத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். முகாமில் 175 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழுவினர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பார்வை குறைபாடுகள் மற்றும் கண்களை ஸ்கேன் செய்து சிகிச்சை அளித்தனர்.
17 பேருக்கு புரை நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முருகதாசன், கந்தசாமி, வினோத், ஜனார்த்தனன், மகாத்மா முருகேசன், விக்ரம் முருகன், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன், அரவிந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.
- வரதட்சணை கொடுமையால் கணவர் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார் கொடுத்தார்.
- திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 120 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.
விருதுநகர்
கோவில்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பூஜா(24). இவருக்கும், விருதுநகர் என்.என்.ரோடு பகுதியை சேர்ந்த கோபிகுமார்(26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 120 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆகஸ்டு மாதத்தில் கோபிகுமார் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் காவியா என்ற பெண்ணுடன் வசித்து வந்த கோபிகுமாரை போலீசார் மீட்டு வந்து விசாரித்தனர்.
அப்போது மனைவியு டன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மேலும் 60 பவுன் நகைகள், ரூ. 30 லட்சம் ரொக்கம் தர வேண்டும் என வற்புறுத்தி பூஜாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூஜா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகுமார், அவரது தந்தை சுந்தரகுமார், தாய் தனம், தங்கை தீபா ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.






