என் மலர்
விருதுநகர்
- நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் தலைவர் பதவி நீக்கப்பட்டார்.
- ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
விருதுநகர்
நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் அடிப்படையில் தலைவராக இருந்த பஞ்சவர்ணம் பதவியை இழந்தார். கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தமுள்ள 14 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்றனர்.
சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பஞ்சவர்ணம் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். மற்றொரு சுயேட்சை தி.மு.க., அ.தி.மு.க. இருதரப்பிலும்இடங்கள் சரிசமமாக இருந்த நிலையில் குலுக்கல் முறையில் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவரானர்.
கடந்த 8 மாதங்களாக யூனியன் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முந்தைய 3 கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரதா உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய பஞ்சவர்ணம் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவருக்கு எதிராக அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். ஆதரவாக ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே வாக்களித்தார்.
இதனால் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார்.
- சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.
- குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துவிட்டது.
விருதுநகர்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஆலோசகர் சிவன் தனது மனைவியுடன் விருதுநகர் வந்தார். அவர்களுடன் முன்னாள் மூத்த இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியனும் விருதுநகர் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லம் சென்று பார்வையிட்டனர். பின்னர் நிருபர்களிடம் சிவன் கூறியதாவது:-
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திராயன்-3 திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.
மற்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் நாம் வளர வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டிற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இந்தியாவில் இருந்து ஏவுகணைகளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான செலவு குறைவாக உள்ளதால் பல்வேறு நாடுகளும் இந்தியாவில் இருந்து தங்களது ஏவுகணைகளை அனுப்ப முன் வந்துள்ளன்.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துவிட்டது. அங்கு கட்டுமான பணிகள் மற்றும் பிற பணிகளை தொடங்குவதற்காக நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அப்பகுதியின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதி அளித்திருந்தது.
- சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாத பவுர்ணமி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (4-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலைஏற வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இன்று சனிபிரதோ ஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிபாறையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
10 வயதிற்குட்பட்ட வர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சனிபிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
- உள்ளாட்சி துறை ஓட்டுநர்கள் கூட்டம் நடந்தது.
- மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஓட்டுநர்கள், துலக்குநர்கள் கூட்டமைப்பு சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மாநில கவுரவத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் பேசினார்.
துணைத்தலைவர் தனசேகரன், கருணாநிதி, முருகன், இணை செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டுக்கு 3 செட்டு சீருடை வழங்க வேண்டும், கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், 152 ஜி.ஓ.வை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் ஓட்டுநர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாகன ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
- வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமாகினர்.
- டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பஜனைகூடத் தெருவை சேர்ந்தவர் வக்கீல் சந்திரசேகரன் (வயது62). இவர் நேற்று சிவகாசி கோர்ட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செ ன்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செந்தாமரை லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துராஜ் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (38). கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). சாத்தூர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
ராஜபாளையம்,
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை அணிவித்தனர்.
மேலும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர்கள் உமா, மாரியப்பன், தி.மு.க. நகர செயலாளர்(தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணைத்த லைவர் கல்பனா குழந்தை வேலு, மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் ஆனந்த், 42-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் 42-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
- இந்துமத முறைப்படி கேட்டியா ஒலி வேரா தன்னுடைய பெயரை மீனாட்சி என காதலுக்காக மாற்றி கொண்டார்.
- கார்த்திக்-கேட்டியா ஒலி வேரா திருமணம் இன்று அருப்புக்கோட்டை அருகே வலுக்கலொட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்தது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளம் கிராமத்தை சேர்ந்த சங்கர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களது மகன் கார்த்திக். என்ஜினீயர் பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக லண்டனுக்கு சென்றார். அங்கு கார்த்திக்கிற்கும், தன்னுடன் பணிபுரிந்த அந்த நாட்டை சேர்ந்த கேட்டியா ஒலி வேரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இந்துமத முறைப்படி கேட்டியா ஒலி வேரா தன்னுடைய பெயரை மீனாட்சி என காதலுக்காக மாற்றி கொண்டார். அவருக்கு பெற்றோர்கள், உறவினர்கள் இல்லை என தெரிகிறது. இதனால் தன்னுடைய திருமணம் இந்தியாவில் இந்து முறைப்படி நடைபெற வேண்டும் என காதலன் கார்த்தியிடம் கேட்டியா ஒலி வேரா தெரிவித்தார். இவர்களது காதலுக்கு கார்த்திக்கின் பெற்றோரும் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதையடுத்து கார்த்திக்-கேட்டியா ஒலி வேரா திருமணம் இன்று அருப்புக்கோட்டை அருகே வலுக்கலொட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்தது. தமிழக முறைப்படி மணமக்கள் மணமேடைக்கு வந்தனர்.
தொடர்ந்து மந்திரங்கள் ஓத கார்த்திக் இந்து முறைப்படி தாலி கட்டி தனது காதலி கேட்டியா ஒலி வேராவை திருமணம் செய்து கொண்டார். இதில் கார்த்திக்கின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பாலத்துக்கு 2-ம் கட்டமாக நிலம் கையகப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டா ட்சியர் அலுவ லகத்தில் ராஜபாளையம்-சத்தி ரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிக்கான 2-ம் கட்ட நில எடுப்புக்கான இறுதி தீர்வுரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமையில் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 19 நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரி வித்தனர். மேலும் ஓரிரு நில உரிமையாளர்கள் தங்களது வீடு பாதிக்காதவாறு நிலத்தை கையகப்படுத்துமாறு கூறினார்கள். அதற்கு பதில் அளித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாதவாறு நிலம் கையகப்படுத்தப்படும்.
மேலும் இந்த மாதத்திற்குள் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விரைவில் நிலம் கையகப்படுத்தி மேம்பாலம் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார்.அதனை தொடர்ந்து 2-ம் கட்ட நில எடுப்பில் என்.ஆர்.கே. பங்க் அருகில் உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களிடம் பேசி பொதுமக்களின் சிரமங்களை எடுத்துரைத்து மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிலம் எடுக்க நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கொடுத்தார்.
மேலும் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி பணியை துரிதப்படுத்துமாறு ஒப்பந்ததாரரிடம் கூறிய எம்.எல்.ஏ., வரும் ஏப்ரல் மாதத்தில் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், தனி தாசில்தார் மாரீஸ்வரன் நெடுஞ்சாலை துறை அலுவலர் ஜெகன் செல்வராஜ், தி.மு.க நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை, போதி இன்டர்நேசனல் ஜெர்மன் ஆப் ரிசர்ஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சர்வதேச கருத்தரங்கம் "ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் புதிய வழிகள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தி வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்ந்துரை வழங்கினார். மலேசியா துல்தான் இத்ரிஸ் கல்வி பல்கலைக்கழக இணை பேராசிரியர் மகேந்திரன் மணிம் சிறப்புரையாற்றினார்.
இந்த அமர்வின் தலைவராக பூவம்மா இருந்தார். காவேரி கல்லூரி துணை முதல்வர் கோணி கோபால், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் ஜான்சேகர் ஆகியோர் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் உள்ள புதிய யுக்திகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகளை பற்றி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியை ஸ்வப்னா, இலங்கை ஈஸ்டன் பல்கலைக்கழகம் மொழி மற்றும் ெதாடர்பியல்துறை ஆங்கில பேராசிரியர் ரோஹன் சவரிமுத்து ஆகியோர் பேசினர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.
- விருதுநகரில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர்- நுகர்வோர் நீதிபதி சேகர் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் மாவட்ட நுகர்வோர் ஆைணயத்தில் நடந்தது.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சாந்தி ஆண்டியப்பன், கிருஷ்ணப்பேளளரி காமாக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டடத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கினார். நுகர்வோர் ஆணையத்தில் எவ்வாறு நுகர்வோர் பயனடையலாம்? என்பதை பற்றியும் விளக்கமளித்தார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர். எந்த ஒரு நுகர்வோரும் எளிமையாக வழக்கு தொடரலாம் என்றும் கூறினர்.
- வைப்பாற்றில் கழிவுநீர்கலக்கும் விவகாரம் தொடர்பாக விருதுநகர் கலெக்டர் பதிலளிக்க வேண்டும்.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர்
சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் வருசநாட்டு மலை பகுதியில் இருந்து வைப்பாற்றுக்கு தண்ணீர் வருகிறது.
இந்த தண்ணீர் மூலம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால் மாசு அடைந்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சியிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திட மும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு வந்தது.அப்போது வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு அலுவலர், பொதுப்பணித்துதுறை அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
- துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவவீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் அருகே உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன், முன்னாள் ராணுவ வீரர். இவரிடம் லைசென்சுடன் இரட்டை குழல் துப்பாக்கி உள்ளது.
இவரது மனைவி தங்கம்(வயது49). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் திருமணத்திற்காக ஆபிரகாம் லிங்கன் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் தனக்கு வரும் பென்சன் பணத்தை கொடுத்து வருகிறார்.
சம்பவத்தன்று பென்சன் பணத்தில் ரூ.3ஆயிரத்தை மதுகுடிக்க செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கம் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மீண்டும் பணம் கேட்டு மனைவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆபிரகாம் லிங்கன் வீட்டில் இருந்த துப்பாக்கியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் லிங்கனை தேடி வருகின்றனர்.






