உள்ளாட்சி துறை ஓட்டுநர்கள் கூட்டம்

உள்ளாட்சி துறை ஓட்டுநர்கள் கூட்டம் நடந்தது. மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
உள்ளாட்சி துறை ஓட்டுநர்கள் கூட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழ்நாடு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஓட்டுநர்கள், துலக்குநர்கள் கூட்டமைப்பு சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மாநில கவுரவத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.

மாநில தலைவர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் பேசினார்.

துணைத்தலைவர் தனசேகரன், கருணாநிதி, முருகன், இணை செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 3 செட்டு சீருடை வழங்க வேண்டும், கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், 152 ஜி.ஓ.வை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் ஓட்டுநர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாகன ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com