search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Local Government"

  • வாழும் சூழலை மேம்படுத்த ப்யூகே உள்ளாட்சி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
  • இரண்டாம் முறையும் சுகாதாரக்கேடு நிலவினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்

  சீனாவின் தென்மேற்கில் உள்ளது சிசுவான் பிராந்தியம் (Sichuan Province). ஆசிய கண்டத்தின் நீளமான நதியான யாங் சே (Yangtze), சிச்சுவான் பிராந்தியம் வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  சிச்சுவான் பிராந்தியத்தின் தெற்கில் உள்ளது ப்யூகே (Puge) உள்ளாட்சி பகுதி. இப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

  இச்சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்.

  பொது மற்றும் வசிப்பிட சுகாதாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, "வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்" என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

  மேலும், இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 வித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் இந்த அமைப்பு விதித்துள்ளது.

  இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விஷயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

  ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மறுமுறையும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும்.

  "ஒரு விவசாயியின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது. அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என இந்த அறிவிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

  உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • உள்ளாட்சி துறை ஓட்டுநர்கள் கூட்டம் நடந்தது.
  • மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  தமிழ்நாடு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஓட்டுநர்கள், துலக்குநர்கள் கூட்டமைப்பு சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மாநில கவுரவத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.

  மாநில தலைவர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் பேசினார்.

  துணைத்தலைவர் தனசேகரன், கருணாநிதி, முருகன், இணை செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  ஆண்டுக்கு 3 செட்டு சீருடை வழங்க வேண்டும், கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், 152 ஜி.ஓ.வை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் ஓட்டுநர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாகன ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

  • 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  6 பதவிகள்

  மீதம் உள்ள சேலம் ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சிகளில் காடையாம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி 7-வது வார்டு, தலைவாசல் ஒன்றியம் தேவியாக்குறிச்சி 2-வது வார்டு, கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டு, மேச்சேரி ஒன்றியம் கூணான்டியூர் 7-வது வார்டு, பொட்டனேரி 6-வது வார்டு ஆகிய–வற்றிற்கு நேற்று முன்தினம் வாக்கப்பதிவு நடந்தது.

  சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியில் உள்ளார். அ.தி.மு.க.ைவ சேர்ந்த வெங்கடேஷ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் இரட்டை இலை சின்னம்

  கிடைக்காதால் சுயேட்சை–யாக போட்டியிட்டு உள்ளார். இங்கு 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

  நடுப்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் 346வ ாக்குகளும், தேவியாக்குறிச்சி 2-வது வார்டில் 202 வாக்குகளும், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் 198 வாக்குகளும், கூணான்டியூர் 7-வது வார்டில் 370 வாக்குகளும் , பொட்ட னேரி 6-வது வார்டில் 275 வாக்குகளும் பதிவானது. இந்த வாக்கு சீட்டுகள் அந்தந்த ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .

  நாளை வாக்கு எண்ணிக்கை

  இதையடுத்து நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள்ஈடுபட்டு உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

  • சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 6 பதவிக்கு 29 பேர் போட்டி, 9-ந் தேதி வாக்குப்பதிவு

  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்தது.

  இந்த நிலையில் சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி நடக்கிறது.

  • ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் சேலம் மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
  • வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

  சேலம்:

  சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் காலி பதவி இடங்களுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் சேலம் ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

  ஊராட்சி பதவிகளில் பூவனூர் 3-வது வார்டுக்கு ஒருவர், நடுப்பட்டி 7-வது வார்டு, கூனாண்டியூர் 7-வது வார்டு, கீரிப்பட்டி 6-வது வார்டு ஆகியவற்றிற்கு தலா 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.புல்லா கவுண்டம்பட்டி 7-வது வார்டு ஒருவர், தேவியாக்குறிச்சி 2-வது வார்டுக்கு ஒருவர், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் ஒருவர், இளவம்பட்டி 5-வது வார்டு ஒருவர், நீர்முள்ளிகுட்டை 6-வது வார்டு ஒருவர் என 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

  மின்னாம்பள்ளி 3-வது வார்டு பொட்டனேரி, 6-வது வார்டு ஒருவர் கூட இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.A

  தமிழக சட்டசபையில் உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly


  தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து டிசம்பர் 30-ந் தேதி அவர்களது பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்தார்.

  இந்த நிலையில் தனி அதிகாரிகளின் 6 மாத பதவி காலத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீடிப்பதற்கான சட்டதிருத்த மசோதாவை சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். #TNAssembly

  ×