இலவச கண்சிகிச்சை முகாம்

இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன், அரவிந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.
இலவச கண்சிகிச்சை முகாம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ரோட்டரி சங்கத் தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார்.

துணை ஆளுனர் சத்யா குமரேசன் தொடங்கி வைத்தார். பட்டயத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். முகாமில் 175 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழுவினர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பார்வை குறைபாடுகள் மற்றும் கண்களை ஸ்கேன் செய்து சிகிச்சை அளித்தனர்.

17 பேருக்கு புரை நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முருகதாசன், கந்தசாமி, வினோத், ஜனார்த்தனன், மகாத்மா முருகேசன், விக்ரம் முருகன், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன், அரவிந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com