சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.இவர் செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது தெரியவந்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
Published on

மதுரை

மதுரையில் வாலிபர் ஒருவர் அத்துமீறி வீடு புகுந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பி சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரணீத், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனை பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சம்பவத்தன்று மாலை 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப் பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அவர் தான் என தெரியவந்தது. மேலும் அவர் மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது31), செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கருப்பசாமியை மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com