search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "sexual"

  • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
  • வாலிபரை தேடி வருகின்றனர்.

  விருதுநகர்

  சிவகாசியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது தாய்-தந்தை கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். வீட்டில் சிறுமி மற்றும் அவரது தம்பியையும் பாட்டி பராமரித்து கொள்வார். இந்த நிலையில் பாட்டி ஊருக்கு சென்றார். சிறுமியும், தம்பியும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே வசிக்கும் சிவஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் செய்தார்.

  போலீசார் ேபாக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

  • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
  • அரசு பள்ளி ஆசிரியருக்கு வலை

  பெரம்பலூர்,

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உடும்பியத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் மணிகண்டன் (வயது 39) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 9 மற்றும் 10ம்வகுப்பிற்கு ஆங்கில பாடம் நடத்தி வருகிறார். மாணவிகளிடம் தவறாக நடத்தல், இரட்டை அர்த்ததில் பேசுவது, சில்மிஷம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த 16ம்தேதி கடிதம் மூலம் உதவி தலைமையாசிரியர் மணியிடம் புகார் அளித்தனர்.இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்ததில் ஆசிரியர் மணிகண்டன் மீதான புகார்கள் உண்மை என தெரியவந்தது.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் மணிகண்டனை தேடிவருகின்றனர்.


  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
  • இவர் செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது தெரியவந்தது.

  மதுரை

  மதுரையில் வாலிபர் ஒருவர் அத்துமீறி வீடு புகுந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பி சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரணீத், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனை பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

  அதில் சம்பவத்தன்று மாலை 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப் பட்டது.

  இதனைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அவர் தான் என தெரியவந்தது. மேலும் அவர் மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது31), செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

  இதையடுத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கருப்பசாமியை மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

  • பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  • மாணவியை திருமணம்செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் தொல்லை கொடுத்தார்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மைகுண்டு ராவுத்தா் அப்பா தெருவைச் சோ்ந்தவா் மீனவா் வேலுச்சாமி. இவரது மகன் திலீப் (23). கூலித் தொழிலாளியான இவா், வாணியங்குளம் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழகினாா்.

  மாணவியை திருமணம்செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அந்த சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து திலீப் மிரட்டினார். இது குறித்து மாணவி, பெற்றோரிடம் புகார் செய்தார். அதன்பேரில் உச்சிப்புளி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனா்.

  • பாலியல் துன்புறுத்தல்: பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
  • மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

  மதுரை

  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில், பெண்கள் இந்தியா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

  புதிய நிர்வாகிகளாக தலைவர் கதீஜா, பொதுச்செயலாளர் சையது அலி பாத்திமா, பொருளாளர் கனகவள்ளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், சமையல் எரிவாயுக்கான கூடுதல் வரியை ரத்து செய்து, விலை குறைப்பு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
  • நடு ரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் அஜ்மீர் காஜாவை கைது செய்தனர்.

  மதுரை

  மதுரையில் பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

  இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி, வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

  அந்த மாணவி போலீசாரிடம் கூறுகையில், "வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த அஜ்மீர் காஜா (வயது 36) என் பெரியம்மா மகளை திருமணம் செய்துள்ளார். அவர் கே.கே. நகரில் உள்ள ஆடிட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நான் ஆன்லைனில் படித்தபோது அம்மாவின் செல்போன் மூலம் உறவினர் அஜ்மீர் காஜா உடன் பேசி வந்தேன்.

  அதன் பிறகு வழக்கம்போல பள்ளிக்கூடத்துக்கு சென்று வர ஆரம்பித்தேன். நான் அவருடன் செல்போனில் பேசுவது இல்லை. 'என்னுடன் செல்போனில் பேச வேண்டும்' என்று அவர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். சம்பவத்தன்று காலை கீழமாசி வீதியில் நடந்து சென்றேன். அங்கு வந்த அஜ்மீர் காஜா, கையை பிடித்து இழுத்து வம்பு செய்ததாக தெரிவித்து உள்ளார்.

  போலீசார் அஜ்மீர் காஜாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மாணவிக்கு நடு ரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் அஜ்மீர் காஜாவை கைது செய்தனர்.

  • பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
  • நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு

  85-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

  இதை தொடர்ந்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாணவிகளும், செவித்திறன் குறைவு டையோர் காதுகேளாதோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

  மேலும் மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் கதிர்வேல் தலைமையில் பள்ளி மாணவ- மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆல்பர்ட் ஆபிரஹாம் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது ெதரியவந்தது. அதன்பேரில் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரஹாமை போலீசார் கைது செய்தனர்.

  நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்மந்தப்பட்ட இன்னொரு ஆசிரியரையும் கைது செய்யவேண்டும், தவறு செய்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×