சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. வாலிபரை தேடி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on

விருதுநகர்

சிவகாசியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது தாய்-தந்தை கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். வீட்டில் சிறுமி மற்றும் அவரது தம்பியையும் பாட்டி பராமரித்து கொள்வார். இந்த நிலையில் பாட்டி ஊருக்கு சென்றார். சிறுமியும், தம்பியும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே வசிக்கும் சிவஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் செய்தார்.

போலீசார் ேபாக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com