என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலையில் வெடிவிபத்து"

    • பேன்சி ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடிக்க தொடங்கின.
    • சிறிது நேரத்தில் அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வி.ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று தயாரிக்கப்பட்ட பேன்சி ரக வெடிகள் ஆலையில் உள்ள அறையில் ஊழியர்கள் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

    இன்று அதிகாலை 5 மணியளவில் பேன்சி ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடிக்க தொடங்கின. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    அறையில் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    பட்டாசு வெடிவிபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×