என் மலர்
விருதுநகர்
- அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடைத்தன.
- இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கஞ்சம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணபதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசில் கணபதி புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு நிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்த அந்த நிலத்தின் உரிமையாளர் இ.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலாவுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கிராம உதவியாளர் மாரீஸ்வரியுடன் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலா விசாரித்தார். அதில் இறந்தவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 மகள்களை தவிக்க விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் பாபா (வயது 48). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2 மகள்களை சந்திரசேகர் பாபா வளர்த்து வந்தார். மனைவியை பிரிந்து மகள்களை வளர்ப்பதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்ததால் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையில் மகள்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சந்திரசேகர் பாபாவின் சகோதரி சந்தனமேரி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரி(வயது33). இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 3 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் காளீஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின்களை நிறுத்தும் லூப்லைன் பகுதியில் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக வந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 400 ஸ்லிப்பர் கிளிப்புகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் ஸ்லிப்பர் கிளிப்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடை பெற்று வரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் தார்பாலின் வழங்கினார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணி களையும், புல்லநாயக்கன் பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், ரூ.5லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட விரிவாக்க பணிகளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பின் பொது மக்களிடம் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை அடுத்துள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் முத்துப்பாண்டி கண்டித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர். அதன்பின் ராஜேஸ்வரி தனது தவறை உணர்ந்து இனிமேல் பரமசிவத்துடன் பழக மாட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் ராஜேஸ்வரியிடம் பேச பரமசிவம் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு, இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த பரமசிவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டு திண்ணையில் தூங்கி இருந்த ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு பரமசிவம் அங்கிருந்து தப்பினார்.
இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடி தலைமறைவாகிய பரமசிவத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
அவர் வெளியூருக்கு எங்காவது தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே பரமசிவத்தை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் பரமசிவத்தை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனியார் நிறுவன ஊழியர்-முதியவர் பரிதாபமாக இறந்தார்.
- நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டி யன்நகரை ேசர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது36). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு கமலக்கண்ணன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
விருதுநகர்-மதுரை ரோட்டில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியலேயே கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது மனைவி சேர்மா தேவி கொடுத்த புகாரின்பே ரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
முதியவர்
சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ்(67). இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சாத்தூர்- கோவில்பட்டி ரோட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சுப்புராஜ் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் பலவேசம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து பகுதிகளிலும் ஆண்கள் பெண்களுக்கு தனி தனியாக சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
- போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய கடை ஊழியரை கைது செய்தனர்.
- ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சாந்தரூபன்(வயது32). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சங்கரன்கோவில் முக்குரோட்டில் வாகன ேசாதனையில் சாந்தரூபன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். ேபாலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்ைல என விசாரித்தனர். அவரிடம் சாந்தரூபன் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசி சாந்தரூபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வாலிபரை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரித்விராஜ்(26) என்பதும் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- வாலிபர்-கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 36). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷ பவுடரை கரைத்து குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிர மணியம் மனைவி சங்கரேஸ்வரி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலிபர்
ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஈஸ்வரன் (26). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இவரை அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈஸ்வரனின் உறவினர் மாரியப்பன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
- 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சாத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்மசங்கர்(வயது37). இவர் மதுரை-சிவகாசி ரோட்டில் உள்ள கொங்கலாபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கீழத்திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கணேசன்(34) என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி டி.கே.எஸ். ஆறுமுகம் ரோட்டை சேர்ந்தவர் முருகன்(48). இவர் சட்டவிரோதமாக கருந்திரிகளை பதுக்கி வைத்ததாக மாரனேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 80 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- டிரைவர்-பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை கஞ்சிநாயக்கன்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா(43). டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. சகோதரர் வீட்டில் தங்கியிருந்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சி இந்திராநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதில் விரக்தியடைந்த தனலட்சுமி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
- மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.
விருதுநகர்
தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.






