என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகள்களை தவிக்க விட்டு தந்தை தற்கொலை
- 2 மகள்களை தவிக்க விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் பாபா (வயது 48). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2 மகள்களை சந்திரசேகர் பாபா வளர்த்து வந்தார். மனைவியை பிரிந்து மகள்களை வளர்ப்பதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்ததால் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையில் மகள்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சந்திரசேகர் பாபாவின் சகோதரி சந்தனமேரி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






