என் மலர்
விருதுநகர்
- நகர்ப்புற நல வாழ்வு மையம் ஓராண்டாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
- சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங் களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி இடைய பொட்டல் தெருவில் பொது மக்களின் வசதிக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்பதற்கு 2021 -22 நிதியாண்டிற்கான மத்திய நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக இடையபொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் கட்டு மான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கணவரை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- விரைவில் பிடிபடுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம் பட்டியை அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 28). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அத்தை மகளான பிரியாவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து பாண்டி செல்வி(22) என்பவரை மதிமன்னன் 2-வது திரு மணம் செய்தார். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மதிமன்னனுக்கு தனது 2-வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பாட்டி இறந்ததால் ஒரு வாரத்திற்கு முன்பு பாண்டி செல்வி அங்கு சென்று விட்டார். அந்த வீட்டிற்கு நேற்று மதிமன்னன் சென்றார். அவர் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து சென்று மனைவி பாண்டிசெல்வியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பாண்டிசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மதிமன்னனை கைது செய்தனர். மதிமன்னம் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் எழுத்து மூலமாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில் அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு முன்னதாக ராஜ பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மருத்து பரிசோத னைக்காக அழைத்து சென்றனர்.
இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்த கழிவறைக்கு சென்ற மதிமன்னன், ஆஸ்பத்திரியின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தேடி பார்த்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மதிமன்னனை பிடிக்க ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மதிமன்னனை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பியோடிய சம்பவம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உசார்படுத்தப் பட்டனர். இதனால் மதி மன்னன் விரைவில் பிடிபடு வார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- சிறுமி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டி நல்லம்மாள் நகரை சேர்்நதவர் ரத்னா. இவரது 17 வயது மகள் பிளஸ்-2 ேதர்வில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததால் ரத்னா அவரை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் ரத்னா வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்ைல. இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தூர் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூசையப்பர், ஆடு வியாபாரி. இவரது மகள் வெண்ணிலா(வயது19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யா வெளியூர் சென்று திரும்பியபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.
இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் மோதல்; மூதாட்டி சாவு
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சுலோசனா(60). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அசோக்நகரில் உள்ள இவரது மகள் ராமதிலகம் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து சுலோசனாவும், ராமதிலகமும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி சென்றனர். ராமதிலகம் வாகனத்தை ஓட்டிவந்தார். அப்ேபாது எதிர்திசையில் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த சுலோசனா படுகாயடைமந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரும்பு வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்்ந்தவர் சேரிப்பழம்(53), பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு சிவகாசியை சேர்ந்த வசந்த் என்ற வியாபாரி அறிமுகமாகி உள்ளார். அவர் பழைய இரும்பை ஏலம் எடுத்து தருவதாகவும், அதற்கு ரூ.2½ செலவாகும் என்றும் சேரிப்பழத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய அவர் கூகுள்-பே மூலம் வசந்திற்கு ரூ.2½ லட்சம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வசந்த் பழைய இரும்பை ஏலம் எடுத்து தரவில்லை. ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சேரிப்பழம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வசந்த் மற்றும் சென்னையை சேர்ந்த சொர்ணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் ஜோடி மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
- ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் ஆலாஊரணி அண்ணாகாலனியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவர் சிவகாசி திருக்குளம் கண்மாய் ரோட்டில் வாள் மற்றும் கத்தியுடன் நின்றுகொண்டு அப்பகுதியில் வருவோரை அச்சுறுத்தி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது திருத்தங்கலை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக நின்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மாரிச்செல்வத்தை கைது செய்த சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
- வாலிபரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது தாய்-தந்தை கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். வீட்டில் சிறுமி மற்றும் அவரது தம்பியையும் பாட்டி பராமரித்து கொள்வார். இந்த நிலையில் பாட்டி ஊருக்கு சென்றார். சிறுமியும், தம்பியும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே வசிக்கும் சிவஜெயராம் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் செய்தார்.
போலீசார் ேபாக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.
- திருச்சுழி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
- உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சியில் காரேந்தல், கொக்குளம், நாடாக்குளம், பள்ளிமடம் மற்றும் ஊரணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்கள் உள்ளது. பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிப்பட்டி பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு பல மாதங்களாக குடிநீர், சாலைவசதி, உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த 2020-21-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரணிப்பட்டி கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குழாய்களில் தாமிரபரணி குடிநீருக்கு பதிலாக உப்பு தண்ணீரே சப்ளை செய்யப்படுகிறது. அதையும் கூட ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவது இல்லை.
இதனால் அன்றாடம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு இடையே நாள்தோறும் குடம் ஒன்றுக்கு ரூ.12 வரை செலவழித்து 4 முதல் 8 குடங்கள் வரை தனியார் குடிநீர் வாகனங்களில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.
குடியிருப்புகள் வழியே முறையான சாலை வசதி யில்லாத காரணத்தால் மழைக்காலங்களின் போது தெருக்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து தீவுகளில் வாழ்வதை போல உள்ளது. மேலும் தேங்கிய மழைநீரில் முழங்கால் வரை நனைந்த படி நடந்து செல்வதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் திருச்சுழி யூனியன் அலுவலகத்திலும் பலமுறை புகாரளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதனால் வீணாகி வரும் சிறிதளவு தண்ணீரையே வெகு நேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருைவ சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபுகண்ணன். இவர் மூலமாக அய்யப்பன் என்பவர் கார்த்திக்குமாருக்கு அறிமுகம் ஆனார்.அவர் மின்வாரியத்தில் அரசு வேலை பெற்றுத்தருவதாக கார்த்திக்குமாைர நம்பவைத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் 2 தவணையாக ரூ.14 லட்சம் கார்த்திக்குமார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார்த்திக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் அய்யப்பன், பிரபுகண்ணன் உள்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணுவ வீரர்-காவலாளி திடீரென இறந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் கோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலப்பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊருக்கு வந்தவர் செவல்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் இருந்து இறங்கியபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உறவிர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் மணக்கன். அரசு பணியாளர் நற்பணி சங்க கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மணக்கன் மகள் மரகதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை சீரமைப்பு கோரி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
- சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும்
விருதுநகர்
சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முதல் டவுன் போலீஸ் நிலையம் முன்பு வரை உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிவு செய்து நெடுஞ்சாலை துறையிடம் தடையின்மை சான்று வழங்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரியம் சாத்தூர் உதவி நிர்வாக பொறியாளர் அவர்கள் தெரிவித்தார்.
மேற்படி தடையின்மைச் சான்று கிடைக்கப்பெற்று பணி தொடங்கும் வரை சாலையில் தூசி பறக்காமல் இருப்பதற்கு காலை மாலை இரு நேரங்களிலும் சாலை யில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் வட்டாட்சியர், அது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர், சாத்தூர் நகர் சார்பு ஆய்வா ளர், சாத்தூர் குறுவட்ட வருவாய் ஆய்வா ளர் மற்றும் சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் கலந்து ெகாண்டனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன், சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கும்கி கார்த்திக், மாவட்டச் செயலாளர் சந்திரன், மேற்கு வட்டார துணைத் தலைவர் முத்துவேல், மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேசுவரன், தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






