search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை சீரமைப்பு கோரி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராட்டம் நிறுத்தி வைப்பு
    X

    சாலை சீரமைப்பு கோரி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராட்டம் நிறுத்தி வைப்பு

    • சாலை சீரமைப்பு கோரி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும்

    விருதுநகர்

    சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முதல் டவுன் போலீஸ் நிலையம் முன்பு வரை உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிவு செய்து நெடுஞ்சாலை துறையிடம் தடையின்மை சான்று வழங்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரியம் சாத்தூர் உதவி நிர்வாக பொறியாளர் அவர்கள் தெரிவித்தார்.

    மேற்படி தடையின்மைச் சான்று கிடைக்கப்பெற்று பணி தொடங்கும் வரை சாலையில் தூசி பறக்காமல் இருப்பதற்கு காலை மாலை இரு நேரங்களிலும் சாலை யில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் வட்டாட்சியர், அது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர், சாத்தூர் நகர் சார்பு ஆய்வா ளர், சாத்தூர் குறுவட்ட வருவாய் ஆய்வா ளர் மற்றும் சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் கலந்து ெகாண்டனர்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன், சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கும்கி கார்த்திக், மாவட்டச் செயலாளர் சந்திரன், மேற்கு வட்டார துணைத் தலைவர் முத்துவேல், மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேசுவரன், தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×