என் மலர்
விழுப்புரம்
- கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்:
வார இறுதி நாளினை முன்னிட்டு, வருகிற 26-ந் தேதி அன்று மக்கள் அவரவர் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும்,பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
- அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
- உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பொதுமக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர்
விழுப்புரம்:
திண்டிவனம் அடுத்த தீர்த்தக்குளம் பூந்தோட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தம் என கூறிவருகின்றனர். இந்நிலையில் இங்கு குடியிருப்பவர்களில் 15 பேர் அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தவில்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15 வீடுகளை காலி செய்ய அறநிலையத் துறை அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் இன்று பூந்தோட்டத்திற்கு வந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்து அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அர்ஜூனன் எம்.எல்.ஏ., அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேலும், அறநிலையத் துறைக்கு இந்த இடம் சொந்தம் என்றால் அதற்குரிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர். அனைவரும் அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அர்ஜூனன் எம்.எல்.ஏ. மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
- அமுதவல்லி அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
- அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
விழுப்புரம்:
மரக்காணம் அருகே உள்ள காட்டு கொள்ளை செய்யாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதவல்லி (வயது 55) இவர் நேற்று மதியம்அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தில் ஒரே ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இதன் காரணமாக அமுதவல்லி கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் நின்று ள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது .
இது பற்றி தகவல் அறிந்த அவரது மகன் ஆனந்த் தனது தாயை ரேஷன் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மயக்கம் அதிகமானதால் அமுதவல்லி மோட்டார் சைக்களில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை புதுவை கனக செட்டி குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து ள்ளனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதவல்லி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
- சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் (வயது 37). இவருக்கு திருமணம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இன்று திடீரென திருமணம் ஆகாத விரக்தியால் பாரத் திடீரென வீட்டிலிருந்த மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள செய்ய முயன்று ள்ளார். பின்னர் படுங்காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முண்டியம்பாக்கம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
- பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
விழுப்புரம்:
ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி பயில உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ் நாட்டை பிறப்பிட மாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இவ்விருத்திற்கு தகுதிக ளான கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான-தனித்துவமான செய்திருத்தல், சாதனை பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிய வற்றிற்கு தீர்வு காண்ப தற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூல மாகவோ விழிப்பு ணர்வை எற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ப தை போன்ற செயல்களை பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
விருதுக்கான விண்ணப் பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு வலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழி களுடன் மாவட்ட சமூகநல அலு வலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீ லனைக்கு அனுப்பி வைக்க ப்படும். மாவட்டங்களி லிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுகுழு மூலம் பரிசீலனை செய்யப்ப ட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வரும் ஜனவரி 24-ந் தேதி மாநில விருது வழங்கப்படும்.
இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செயல்படும் அறை எண்.26 மாவட்ட சமூக நல அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் 20.11.2023 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப் படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரி வித்துள்ளார்.
- அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்காக காரணத்தை அவரது வக்கீல்கள் மனுவாக தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூரணி அம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.
- காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
- ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது,
காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.
- முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்
- உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.
விழுப்–பு–ரம்:
விழுப்–பு–ரம் மாவட்–டம் மேல்–ம–லை–ய–னூர் தேர்தல் பிரிவு துணை தாசில்–தா–ராக பணி–யாற்றி வந்த தன–லட்–சுமி பதவி உயர்வு பெற்று செஞ்சி ஆதி–தி–ரா–வி–ட–நல தனி தாசில்–தா–ராக நிய–ம–னம் செய்–யப்–பட்–டார். அதேபோன்று, திரு–வெண்–ணைநல்–லூர் தலைமை–யி–டத்து துணை தாசில்–தார் செந்தில்–கு–மார் பதவி உயர்வு பெற்று விழுப்–பு–ரம் ஆதி–தி–ரா–விட நல தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்–ம–லை–ய–னூர் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் துரைச்–செல்–வன் பதவி உயர்வு பெற்று செஞ்சி சமூக பாது–காப்பு திட்ட தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ளார்–கள்.
மேலும், மரக்–கா–ணம் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் ஏழு–மலை பதவி உயர்வு பெற்று மரக்–கா–ணம் தேசிய நெடுஞ்–சாலை நில–எ–டுப்பு தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்– ம–லை–ய–னூர் வட்ட வழங்–கல் அலு–வ–லர் கிருஷ்–ண–தாஸ் திண்–டி–வ–னம் முத்–தி–ரைத்–தாள் தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ள–னர். இதேபோல் மாவட்ட கலெக்டர் அலு–வ–லக தலைமை உத–வி–யா–ளர் கனி–மொழி, திரு–வெண்–ணைநல்–லூர் தேர்–தல் துணை தாசில்–தார் வித்–யா–த–ரன், விக்–கி–ர–வாண்டி மண்–டல துணை தாசில்–தார் யுவ–ராஜ், செஞ்சி வட்ட வழங்–கல் அலு–வ–லர் வெங்–க–டேசன், திண்–டி–வ–னம் மண்–டல துணை தாசில்–தார் ராஜ–சேகர், கண்–டாச்–சி–பு–ரம் தேர்தல் பிரிவு துணை தாசில்–தார் ரமேஷ் இவர்–கள் உள்–பட மொத்–தம் 20 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்டத்–திற்–குள் வெவ்–வேறு இடங்–க–ளுக்கு நிய–மிக்–கப்–பட்–டுள்–ளார்–கள்.
மேலும் முது–நிலை வரு–வாய் ஆய்–வா–ளர்–க–ளாக பணி– யாற்றி வந்த மலர்–விழி, சித்–தார்த்–தன், ஆறு–மு–கம், கணேசன், அக்–தர்–ஜெகன், வேல்–மு–ரு–கன், சொர்–ணாம்–பிகை உள்–ளிட்ட 19 பேர் துணை தாசில்–தா–ராக பதவி உயர்வு பெற்று மாவட்–டத்–தில் வெவ்–வேறு இடங்–களில் பணி நிய–ம–னம் செய்–யப்பட்–டுள்–ள–னர். இதற்–கான உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.
- சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைவரையும் மகிழ்வித்தார்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டையில் உள்ள ஹசரத் சையத்பாபா தர்காவின் 26-ம் ஆண்டு சந்தன குடம் மற்றும் உருஸ்முபாரக் திருவிழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.
இதில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், நகர செயலாளர் கார்திக், ஊராட்சி மன்ற தலைவர் பிலால், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் காசியம்மாள் ஏழுமலை, ஏழுமலை, பாலகிருஷ்ணன், கவுன் சிலர் ஜான்பாஷா, நிர்வாகிகள் ஜே.எஸ். சார்தார், தொண்டரணி பாஷா உள்ளிட்ட உரூஸ் கமிட்டியினர் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
- மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பள்ளி பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என ஸ்ரீமதியின் தாய் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதியின் தாய் சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் கஜேந்திரன், விழுப்புரம் வக்கீல்கள் லூசியா, கேசவன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள், மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு ஓய்வுபெற்ற நீதிபதி நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் குற்றப்பத்திரிகை தொடர்பாக சில ஆவணங்களை சரி பார்க்க வேண்டி உள்ளது. எனவே, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
- விழுப்புர மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர்.
- எதிர்ப்பு தெரிவித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
விழுப்புரம்:
மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விழுப்புர மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றவியல் வக்கீல்கள், சங்கத் தலைவர் காளிதாஸ் தலைமையில் பார் அசோசியன் தலைவர் தயானந்தம், விழுப்புரம் லாயர் அசோசியேஷன் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த வக்கீல்கள் மாரிமுத்து, ஜெயபிரகாஷ், தன்ராஜ், தமிழரசன், முகில்வண்ணன், பிரின்ஸ், சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.






