search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே வீடுகளை காலி செய்ய வந்த அறநிலையத் துறை அதிகாரிகள்: அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்
    X

    அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அர்ஜூனன் எம்.எல்.ஏ.,

    திண்டிவனம் அருகே வீடுகளை காலி செய்ய வந்த அறநிலையத் துறை அதிகாரிகள்: அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்

    • பொதுமக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர்

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த தீர்த்தக்குளம் பூந்தோட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தம் என கூறிவருகின்றனர். இந்நிலையில் இங்கு குடியிருப்பவர்களில் 15 பேர் அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தவில்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15 வீடுகளை காலி செய்ய அறநிலையத் துறை அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் இன்று பூந்தோட்டத்திற்கு வந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்து அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அர்ஜூனன் எம்.எல்.ஏ., அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேலும், அறநிலையத் துறைக்கு இந்த இடம் சொந்தம் என்றால் அதற்குரிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர். அனைவரும் அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அர்ஜூனன் எம்.எல்.ஏ. மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    Next Story
    ×