என் மலர்
விழுப்புரம்
- செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் கூலி தொழிலாளி.
- லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.
வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென உத்தரவேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் உத்தரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
- அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ்சில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். அதே சாலையில் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். மாண்டூர் உர நிறுவனம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணை நல்லூர் போலீசார் இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளின் வீட்டிற்கு சென்றார்.
- சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 62). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அருகே உள்ள தென்பசாரில் உள்ள அவரது மகளின் இல்லத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று பெர மண்டூருக்கு வருவதற்காக தென் பசாரில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
அப்போது விழுப்புரத்தி லிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுசிலா பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்நிலையில் சுசிலா மீது மோதிய காரை, அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மயிலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்
- சன்னதியில் தேங்காய் கொடுத்தார்.
விழுப்புரம்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும் அமாவாசை யன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று பெண் பக்தர் ஒருவர் உற்சவர் அம்மன் சன்னதியில் தேங்காயை கொடுத்தார். அதை பூசாரிகள் உடைக்கும் போது அதன் உட்புறம் இரண்டு மூடிகள் இருந்தது அங்கிருந்தவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
- சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55) . கூலித் தொழிலாளி.இவர் திண்டிவனம் எம். ஆர். எஸ். கே. கேட் அருகே டாஸ்மாக் கடைக்குஎதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரோட்டை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நாகராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.
- கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது.
- அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில் முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்ப ரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.
அப்போது முரளிதாஸ் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாபு, முரளிதாசிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளிதாசின் வலது காலில் வெட்டினார். இதனால் பலத்த காயமடைந்த முரளிதாஸ், கீழே விழுந்து கூச்சலிட்டு கதறினார். இதனைப் பார்த்த பாபு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முரளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முரளிதாசிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்ட காலில் இருந்து ரத்தம் நிற்கவில்லை. இந்நிலையில் முரளி தாஸ் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முரளிதாசை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய பாபு மற்றும் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
- அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது.
திண்டிவனம், செப்.30-
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் 31 ஆயிரம் லிட்டர் சல்பரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதால் லாரி டிரைவர் அறிவழகன் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
அப்போது லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியிலிருந்து சல்பரிக் ஆசிட் பீறிட்டு அடித்து சிறிது நேரத்தில் சாலை முழுவதும் பரவியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லாரியில் இருந்த சல்பரிக் ஆசிட்டை அருகில் இருந்த வாய்க்காலில் திறந்து விட்டனர்.
தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரி சாலையோரமாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிட் ரோட்டில் ஊற்றியதால் பொதுமக்களுக்கு சில பேருக்கு கண் எரிச்சல் மற்றும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊர்வலம் வந்து பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
- அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவமூர்த்தி கோவில் வளாகத்தினுள் ஊர்வலம் வந்து பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய் தார்.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
- தீவிர சோதனை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பவுர்ணமி பூஜை நடை பெற்றது.
- வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடை பெற்றது. இதை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெரு மானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்கா ரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க விளக்கு பூஜை செய்யும் இடத்தில் எழுந்தருளினார்.பின்பு பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபா ராதனை காண்பித்தவுடன் விளக்கு பூஜை முடிவடைந்தது. விழாவுக்கான ஏற்பா டுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவான ந்தம் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.
- அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.
- தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செந்தில்குமார், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் தயா இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.பி ரமேஷ், விழுப்புரம் நகரதலைவர் செல்வராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் வண்டிமேடு ராஜ்குமார், தே.மு.தி.க. நகரத் தலைவர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ஐ மாவட்ட நிர்வாகி, தனி தாசில்தார் (தேர்தல்) கோவர்தனன், தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
- கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னாள் சென்ற கண்டெயினர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
- முன்பக்கத்தை நீக்கி, அதில் சிக்கியிருந்த டிரைவரை பொதுமக்கள் மீட்டனர்.
விழுப்புரம்:
சென்னையை சேர்ந்த சஞ்சய் (வயது 35), லலிதா (30) தம்பதியினர் தங்களது குடும்பத்தை சேர்ந்த 10 பேருடன் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு இன்று அதிகாலை புறப்பட்டனர். சொகுசு வேனை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஜீவா (24) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி வெங்க டேஸ்வர நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னாள் சென்ற கண்டெயினர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு வேனின் டிரைவர் இருக்கை பக்கம் சேதமடைந்தது. விபத்தில் டிரைவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், டிரைவரின் கால்கள் மாட்டிக் கொண்டு அவரால் வெளியில் வரமுடியவில்லை. சொகுசு வேனில் பயணித்த சஞ்சய் மற்றும் லலிதாவிற்கு கைகளில் அடிபட்டது. இது தவிர 4 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்ற வர்கள் காயமடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சொகுசு வேனில் சிக்கிய டிரைவரை மீட்கும் முயற்சியில் சுமார் 1 மணி நேரம் ஈடுபட்டனர். கயிறு, கடப்பாரை கொண்டு சொகுசு வேனில் முன்பகுதியை நீக்க பொதுமக்கள் முயற்சித்தும் டிரைவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரத்தை வர வழைத்து சொகுசு வேனின் முன்பக்கத்தை நீக்கி, அதில் சிக்கியிருந்த டிரைவரை பொதுமக்கள் மீட்டனர். அவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், விபத்துக்குள்ளான சொகுசு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






