என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது.

    திண்டிவனம், செப்.30-

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் 31 ஆயிரம் லிட்டர் சல்பரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதால் லாரி டிரைவர் அறிவழகன் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

    அப்போது லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியிலிருந்து சல்பரிக் ஆசிட் பீறிட்டு அடித்து சிறிது நேரத்தில் சாலை முழுவதும் பரவியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லாரியில் இருந்த சல்பரிக் ஆசிட்டை அருகில் இருந்த வாய்க்காலில் திறந்து விட்டனர்.

    தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரி சாலையோரமாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிட் ரோட்டில் ஊற்றியதால் பொதுமக்களுக்கு சில பேருக்கு கண் எரிச்சல் மற்றும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊர்வலம் வந்து பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
    • அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவமூர்த்தி கோவில் வளாகத்தினுள் ஊர்வலம் வந்து பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய் தார்.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
    • தீவிர சோதனை

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பவுர்ணமி பூஜை நடை பெற்றது.
    • வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடை பெற்றது. இதை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெரு மானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்கா ரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க விளக்கு பூஜை செய்யும் இடத்தில் எழுந்தருளினார்.பின்பு பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபா ராதனை காண்பித்தவுடன் விளக்கு பூஜை முடிவடைந்தது. விழாவுக்கான ஏற்பா டுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவான ந்தம் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    • அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.
    • தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செந்தில்குமார், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் தயா இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.பி ரமேஷ், விழுப்புரம் நகரதலைவர் செல்வராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் வண்டிமேடு ராஜ்குமார், தே.மு.தி.க. நகரத் தலைவர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ஐ மாவட்ட நிர்வாகி, தனி தாசில்தார் (தேர்தல்) கோவர்தனன், தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னாள் சென்ற கண்டெயினர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
    • முன்பக்கத்தை நீக்கி, அதில் சிக்கியிருந்த டிரைவரை பொதுமக்கள் மீட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையை சேர்ந்த சஞ்சய் (வயது 35), லலிதா (30) தம்பதியினர் தங்களது குடும்பத்தை சேர்ந்த 10 பேருடன் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு இன்று அதிகாலை புறப்பட்டனர். சொகுசு வேனை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஜீவா (24) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி வெங்க டேஸ்வர நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அப்போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னாள் சென்ற கண்டெயினர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு வேனின் டிரைவர் இருக்கை பக்கம் சேதமடைந்தது. விபத்தில் டிரைவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், டிரைவரின் கால்கள் மாட்டிக் கொண்டு அவரால் வெளியில் வரமுடியவில்லை. சொகுசு வேனில் பயணித்த சஞ்சய் மற்றும் லலிதாவிற்கு கைகளில் அடிபட்டது. இது தவிர 4 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்ற வர்கள் காயமடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், சொகுசு வேனில் சிக்கிய டிரைவரை மீட்கும் முயற்சியில் சுமார் 1 மணி நேரம் ஈடுபட்டனர். கயிறு, கடப்பாரை கொண்டு சொகுசு வேனில் முன்பகுதியை நீக்க பொதுமக்கள் முயற்சித்தும் டிரைவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரத்தை வர வழைத்து சொகுசு வேனின் முன்பக்கத்தை நீக்கி, அதில் சிக்கியிருந்த டிரைவரை பொதுமக்கள் மீட்டனர். அவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், விபத்துக்குள்ளான சொகுசு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.
    • முடிவில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு தலை வர் விஜயகுமார் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரிதி, கணேசன், பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலு வலர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

    • அப்பாவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள செம்மேடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு (வயது 73). இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது. இதில் அப்பாவு சம்பவ இடத்திலேயே இறந்தார்். இது குறித்து அவரது மகன் அஜித் குமார் கொடுத்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார்.
    • கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 1-ல் முத்துகிருஷ்ணன் முதல் தெருவில் வசித்து வந்தவர் கவிதா (வயது 47). வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு உதவியாக இளையமகள் அவரது வீட்டில் தங்கியுள்ளார். கணவனை இழந்த கவிதா 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடனை கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். கடனை திருப்பி அளிக்க முடியாத கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்றவர் திரும்ப வெளியில் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் இவரை தேடி நேற்று மதியம் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த மின் விசிறியில் புடவையினால் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இது குறித்த தகவலின் படி திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் காணிக்கைகளை ஒவ் வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவா னந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வர் சங்கீதா, அறங்கா வலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாய் ரொக்கமும், 315 கிராம் தங்க நகைகளும், 1,110 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த பணியின்போது அறங்காவலர்கள் பூசாரிகள் தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடி வேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழி யர்கள், ஆகியோர் உடனி ருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    • திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
    • இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு த்துறை சார்பில் புகைப்ப டக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் தமி ழ்நாடு முதல்-அமைச்சரால் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

    குறிப்பாக "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட ங்கள், அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல் -அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    • கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர்.
    • 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடு த்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தை கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர். மரக்காணம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஞானசேகரன் தலைமையி லான நிர்வாகிகள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடு க்க வேண்டுமென புகாரளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    ×