விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு

தேவராசு திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார்.அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை  உடைத்து நகை- பணம் திருட்டு
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை பணம் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த வி. மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராசு(50). இவர் திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாவாடை கூறிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சத்தம் கேட்டு பாவாடை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருந்தும் உள்ளே பீரோ திறந்தும் கிடந்தது. இது பற்றி திருச்செந்தூரில் இருந்த தேவராசிடம் தகவல் தெரிவித்தனர். அவர் வி .மாத்தூர் திரும்பி வந்து பீரோவை பார்த்தபோது அதிலிருந்த8 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது பற்றிய புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com