விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது. பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான டிராக்டர்
விபத்துக்குள்ளான டிராக்டர்
Published on

விழுப்புரம்

கொய்யா மரகட்டை களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் இன்று காலை 7.30 மணிக்கு முண்டியம்பாக்கம் நோக்கி சென்றது. இந்த டிராக்டரை விக்கிரவாண்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். டிராக்டர் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது. இதனால் டிப்பர் மேலே தூக்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தலை கீழாக கவிழ்ந்தது.

விபத்தில் டிராக்டர் டிரைவர் நாகராஜ்க்கு படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்பு ரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அலுவ லர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை யில் கவிழ்ந்த கிடந்த டிராக்டர் டிப்பரை அகற்றி னர். இதனால் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com