திருவெண்ணைநல்லூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி போலீசார் விசாரணை

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி போலீசார் விசாரணை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ்சில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். அதே சாலையில் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். மாண்டூர் உர நிறுவனம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணை நல்லூர் போலீசார் இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com