search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே இன்று காலை லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
    X

    டேங்கர் லாரியில் இருந்து ஆசிட் கொட்டிய காட்சி.

    திண்டிவனம் அருகே இன்று காலை லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

    • சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது.

    திண்டிவனம், செப்.30-

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் 31 ஆயிரம் லிட்டர் சல்பரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதால் லாரி டிரைவர் அறிவழகன் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

    அப்போது லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியிலிருந்து சல்பரிக் ஆசிட் பீறிட்டு அடித்து சிறிது நேரத்தில் சாலை முழுவதும் பரவியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லாரியில் இருந்த சல்பரிக் ஆசிட்டை அருகில் இருந்த வாய்க்காலில் திறந்து விட்டனர்.

    தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரி சாலையோரமாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிட் ரோட்டில் ஊற்றியதால் பொதுமக்களுக்கு சில பேருக்கு கண் எரிச்சல் மற்றும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×