விக்கிரவாண்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

ஊர்வலம் வந்து பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய்தார்.
விக்கிரவாண்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம்சனி உற்சவம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம்சனி உற்சவம் நடைபெற்றது.
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவமூர்த்தி கோவில் வளாகத்தினுள் ஊர்வலம் வந்து பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய் தார்.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com