என் மலர்
விழுப்புரம்
- பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் பெரும்பாலான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
- பா.ம.க. கட்சிக்கொடியை ராமதாஸ் ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழா நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பா.ம.க. கட்சிக்கொடியை அவர் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். தலைவர் அன்புமணி விழாவை புறக்கணித்தார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ராமதாஸ், தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து என்று கூறினார்.
- நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
- மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும்.
திண்டிவனம்:
சென்னையில் ஏ.கே.மூர்த்தி குடும்ப விழாவில் பங்கேற்று விட்டு விழுப்புரம் மாவட்டம் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பினார். அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு அது குறித்து நாளை சொல்கிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி மற்றும் அவரது தாயார் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பிள்ளையை பார்ப்பது ஒன்றுமில்லை என பதிலளித்தார்.
மோதல் போக்கு சரியாகிவிட்டதா என கேட்ட கேள்விக்கு மோதல் போக்கு 4 நாட்கள் இருக்கும். அதுக்கு அப்பறம் சரியாகிவிடும். விரைவில் நாங்கள் இருவரும் சந்திப்போம் என டாக்டர் ராமதாஸ் பதில் அளித்தார்.
- தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
- சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை தான் வைத்திருந்த ஏர்கன் (துப்பாக்கி) கொண்டு சுட்டார்.
இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணையில், தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தென்னரசு போதைக்கு அடிமையாக்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தென்னரசு, தனது தாய், மனைவி சித்தப்பாவின் மகன் ஆகியோரை சுட்டது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தென்னரசுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது.
- தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது.
காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்.
- உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைசருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
உங்களது எழுச்சியை பார்க்கும்போது அடுத்த ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் ஒரு குழு போடுவார். அதோடு அந்த திட்டத்தை கைவிட்டு விடுவார். இந்த அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக மாறிவிட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ஏதாவது திட்டம் இந்த தொகுதிக்கு வந்ததா? அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை முடக்கியது தான் அவருடைய சாதனையாகும். ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். கொள்ளையடிப்பதற்கு மட்டுமே திட்டங்களை கொண்டு வருகிறார்கள். உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதன் மூலம் வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளையடித்தது தான் தி.மு.க. அரசு.
இந்த ஊழல் அரசாங்கம் தொடர வேண்டுமா? இது மட்டுமல்ல ஊழல் இல்லாத துறையே இல்லை. இப்படி ஊழல் மலிந்த ஒரே அரசு தி.முக. அரசு. இதற்கெல்லாம் முடிவு கட்ட வரும் தேர்தல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலாகும். அ.தி.மு.க. ஆட்சியில் முடிவுற்ற பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா காணும் முதலமைச்சர் தான் ஸ்டாலின்.
அ.தி.மு.க. ஆட்சியில் மயிலம் தொகுதியில் சிப்காட்டில் காய்கனி பதப்படுத்தும் பூங்கா 1000 கோடி ரூபாயில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அந்த பூங்கா அமைந்து இருந்தால் பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுவும் இந்த ஆட்சியில் பறிபோய் விட்டது.
மரக்காணத்தில் 1500 கோடி ரூபாயில் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். ஆனால் அந்த திட்டத்தையும் இந்த அரசு ரத்து செய்து விட்டது. இப்படிபட்ட மக்கள் விரோத அரசு இருக்க வேண்டுமா? மக்களுக்கு குடிநீர் வாங்குவதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் ஆவார்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்தோம். அதை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். ஏன் இந்த ஏழை மாணவர்கள் படிக்கக்கூடாதா? அவர்கள் படிப்பது உங்களுக்கு கசக்கிறதா. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாகும்.
இந்த மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக வருவதற்கு எங்களது அரசு துணை நிற்கும். 2026-ல் மாற்றம் வரும். மக்களுக்கு ஏற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக கேரளா செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. செஞ்சி ஆற்றுப்பாலம் அருகில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய இரண்டு சக்கர வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
- செஞ்சி கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.
- செஞ்சி கோட்டை சத்ரபதி சிவாஜியால், ‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என்று பாராட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை திகழ்கிறது. சோழர் காலத்தில், 'சிங்கபுரி' என்றழைக்கப்பட்டது செஞ்சி. இதுவே திரிந்து செஞ்சி என்று ஆனது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் ஆனந்தகோன் என்ற குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13ம் நூற்றாண்டில் நிறுவினார். அதைத் தொடர்ந்து 13ம் நூற்றாண்டிலேயே கோன் சமூக ராஜவம்சத்தால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. ஆனந்த கோன் எனும் அரசரால் கட்டப்பட்டு, பின்னர் கிருஷ்ண கோன் எனும் அரசரால் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கோட்டை மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டு, மிகப்பெரிய அரணாக விளங்கியது. செஞ்சி கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.
செஞ்சி கோட்டை சத்ரபதி சிவாஜியால், 'இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை' என்று பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை, 'கிழக்கின் ட்ராய்' என்று அழைத்தனர்.
1921ம் ஆண்டு, இது முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
இந்த நிலையில் உலக புராதன சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக புராதன சின்னங்களில் செஞ்சிகோட்டை இடம் பெற்றது.
- தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பலவற்றை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வானூர் அருகே திருச்சிற்றம்பலம் 4 முனை சந்திப்பில் பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக ஸ்டாலின் ஏமாற்றினர். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படாதால் மாணவர்கள் உயிர்நீத்தது தான் மிச்சம்.
பொய் பேசி ஓட்டு பெற்று ஏமாற்றும் கட்சி தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் தி.மு.க. குடும்பத்தில் இருப்பவர்தான் பொறுப்புக்கு வர முடியும். தி.மு.க.வில் நடப்பது மன்னர் ஆட்சியா? குடும்பத்தில் இருப்பவர்தான் வர வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக சட்டசபை தேர்தல் இருக்கும்.
விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஓடோடி வந்து பார்த்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை
அ.தி.மு.க. கொடுத்த அழுத்தத்தால் ஆட்சிக்கு வந்து 25 மாதத்துக்கு பிறகுதான் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்கள். தேர்தல் வரை மட்டுமே மகளிர் உரிமைத்தொகையை தருவார்கள்.
தி.மு.க.வின் ரூ.1,000 உரிமைத்தொகையை நம்பி நாங்கள் தரவிருந்த ரூ.1,500-ஐ தவறவிட்டீர்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் தந்தது அ.தி.மு.க.தான். கல்விக்கு முக்கியத்துவம் தராதது தி.மு.க. என தெரிவித்தார்.
- டாக்டர் ராமதாஸ் மயிலாடுதுறை சென்றுள்ளார்.
- இந்த நேரத்தில் அன்புமணி தாலாபுரம் இல்லம் சென்றுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நான்தான் தலைவர் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மோதலை முன்னிட்டு இருவரும் சந்திக்காமல் உள்ளனர். ராமதாசின் 60ஆவது கல்யாணம் விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது கூட அன்புமணி, தைலாபுரம் இல்லத்திற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் இன்றிரவு அன்புமணி, தைலாபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார். தாயாரை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் மயிலாடுதுறை சென்றுள்ளார். இந்தவேளையில்தான் அன்புமணி அங்கு சென்றுள்ளார்.
- மாணவர்களின் நலன் கருதி அதை, அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர சொன்னேன்.
- அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது கோவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறையில் இருந்துதான் அதற்கு நிதி ஒதுக்க முடியும். மாணவர்களின் நலன் கருதி அதை, அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர சொன்னால், கண்ணு, காது, மூக்கு வச்சு இரண்டு நாளாக விவாதம் நடக்கிறது
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற முறையில், நானே முடிவு செய்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்இடஒதுக்கீடு கொண்டுவந்தேன். ஏழைகளும் மருத்துவர் ஆகலாம் என்ற கனவை நினைவேற்றிய அரசு அதிமுக அரசு
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம். ஒரேயொரு மருத்துவக் கல்லூரி உங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வர முடிந்ததா?" என்று தெரிவித்துள்ளார்.
- செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திற்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டது சர்ச்சையானது.
- ஸ்ரீகாந்திக்கு பதவி அளிப்பது குறித்து போக போக தெரியும்.
பா.ம.க. சார்பாக கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டார்.
அப்போது அவரிடம் பூம்புகார் மாநாட்டிற்கு டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என கேட்ட கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்த டாக்டர் ராமதாஸ் பிறகு தெரிவிக்கிறேன் என கூறினார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க .செயற்குழு கூட்டத்தில் தங்களது மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார் . இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. குடும்பத்தினர்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என நீங்கள் சொல்லி உள்ளீர்கள் எனக் கேட்ட கேள்விக்கு ஏற்கனவே எங்கள் குடும்பத்திலிருந்து கலந்து உள்ளார்கள்.
தங்கள் மகள் காந்திமதிக்கு பா.ம.க.வில் பொறுப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு போக போக தெரியும் என சினிமா பாடலை பாடி அங்கிருந்து கிளம்பி சென்றார்.
- எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
- அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனை கட்டி உள்ளாரே ரெட்டி அவரைப்போல அய்யாவாலும் பெரிய ஆளாக வந்திருக்க முடியும்.
அன்றைக்கு எங்கேயோ ஒரு டாக்டர் தான் இருப்பார்கள். இன்றைக்கு ஊர் ஊருக்கு டாக்டர்.
யாரால் ஊர் ஊருக்கு டாக்டர். எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
இன்று வெள்ளை சட்டை போட்டு இருக்கிறேன் என்றால் அது என் தம்பி எடுத்துக்கொடுத்தது. நான் வந்த கார் என் தம்பி வாங்கி கொடுத்தது. இதையெல்லாம் தம்பி வாங்கி கொடுத்தான் என்று தான் பேரு. ஆனால் அதற்கு காரணம் குலதெய்வம் மருத்துவர் அய்யா.
இப்படிப்பட்டதெய்வத்தை ஒரு நிமிடம் கூட நாம் மறந்தோம் என்றால் நாம் அழிந்து போவோம்.
இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் மருத்துவர் அய்யாவை தெய்வமாக பார்க்க வேண்டும். அய்யா சொல்வதை செய்ய தயாராக இருக்கிறோம். அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
நீங்கள் எனக்கு மேயர் சீட், எம்.எல்.ஏ. சீட், இன்னும் பல பதவிகள் கொடுத்தீர்கள், இன்றைக்கு இணைப்பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவி கொடுத்து உள்ளீர்கள்.
அய்யா அவர்கள் விரும்பியது இட ஒதுக்கீடு. அந்த இட ஒதுக்கீட்டிற்காகத்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சொல்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் கிடையாது. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, பொறுப்பு மாற்றுவதற்கோ அதிகாரம் உள்ளவர் மருத்துவர் அய்யா மட்டும் தான்.
அருள் உன் உயிர் எனக்கு வேண்டும் என்று அய்யா சொன்னால் இந்த டி.வி.க்காரர்கள் முன்னாடி என் கழுத்தை அறுத்துக்கொண்டு சாவதற்கு தயாராக உள்ளேன்.
என்றைக்கும் என் தலைவர்... என் உயிர் உள்ளவரை, என் மகன் உள்ளவரை, என் குடும்பம் உள்ளவரை மருத்துவர் அய்யா நீங்கள் மட்டுமே என்று கூறினார்.
- தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
- சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்சியை பலவீனப்படுத்தும் நபர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி முடிவை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-
* பா.ம.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் வலி புரியும்.
* தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
* சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தான் தேர்தலை சந்திக்க முடிவு.
* சட்டமன்ற தேர்தலில் ஏ, பி, பார்ம்களில் கையெழுத்து போடும் உரிமை எனக்கே உள்ளது.
* வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாகுங்கள் என்றார்.






