என் மலர்
விழுப்புரம்
- போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
- பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் இருந்து இன்று காைல அரசு பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். இதனால் பஸ்சில் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் அந்த பஸ் காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள பஸ் நிறுத்ததில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் பஸ்சின் மீது கல்லை கொண்டு ஏறிந்தனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறும்.
- பாராளுமன்றத்தில் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை.
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் விரைவில் வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
* வட மாநிலத்தவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் இணைக்க முயற்சி.
* வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறும்.
* பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்கு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
* பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை நீக்கும் சதி உள்ளதாக தெரிகிறது.
* CAA சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
* பாராளுமன்றத்தில் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை.
* சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கை
* பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை நீக்கும் சதி உள்ளதாக தெரிகிறது.
* தமிழக முதலமைச்சர் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.
- பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 40-க்கும் மேற்பட்ட மீன்வர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.
வேளான்மை துறை, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளாண் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல. உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி, திட்டம் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கும், வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும். தலைநகர் சென்னையில் எத்தனை நூலகங்கள் இருந்தாலும் கன்னிமாரா தேசிய நூலகம் தனிபெருமை கொண்டது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகவதால் உரிய தீர்வை அளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது. ஒரே தலைமை தான் ஒரே தலைவர் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் ஒரு துளியும் பயனில்லை. தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். காவல் துறை தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாம் தெரியும் முறைப்படி புகார் அளித்திருக்கிறோம். பா.ம.க. தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு விழா, உலக சாதனை சிலம்பம் நிகழ்வு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
- மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமோடு இருக்க வேண்டும்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சரஸ்வதி கல்லூரியில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா, புதிய கைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா, சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு விழா, உலக சாதனை சிலம்பம் நிகழ்வு ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் 87 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அவருடன் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் காந்திமதி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் புகைப்பட கலைஞரிடம் கேமராவை வாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்த மாணவ, மாணவிகளை வீடியோ எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் டாக்டர் ராமதாசுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து சூரிய மின்சக்தி கட்டுப்பாட்டு அறையை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற முக்கிய தலைவர்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் என கூறினார்.
பின்னர் தங்களது பிறந்தநாளில் மக்களுக்கும், பா.ம.க.வினருக்கும் என்ன கூற இருக்கிறீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு, மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமோடு இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். ஒரு சொட்டு மழைநீரை கூட கடலில் கலக்க விடக்கூடாது என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கைப்பந்து விளையாட்டு மைதானத்தை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து கைப்பந்தை அடித்து விளையாட்டை தொடங்கி வைத்தார்.
- தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
- கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
தொடர்ந்து இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலோடு ஒட்டு கேட்பு கருவியை ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான். பா.ம.க.வில் கௌரவ தலைவராக ஜிகே.மணி, செயல் தலைவராக அன்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு யாராவது 'நான் தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
எனது இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்கள் யார் என எனக்குத் தெரியும். விசாரணை பாதிக்கப்பட கூடாது என்பதால் அதனை பற்றி தெரிவிக்கவில்லை என்றார்.
- அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.
- பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.
விழுப்புரம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி சோழமன்னர்களின் வாரிசுகளை பெருமைப்படுத்த வேண்டும்.
* அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.
* பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.
* செயல்தலைவராக இருந்தும் நடைபயணத்திற்காக என்னிடம் அனுமதி வாங்கவில்லை. அதனால்
அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும்.
* அன்புமணி சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
- புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.
- தர்மத்தின் வாழ்வுதவனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:-
* பா.ம.க. தலைமை அலுவலகம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது.
* புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.
* புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.
* தர்மத்தின் வாழ்வுதவனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.
* அன்புமணியின் பெயருக்கு பின்னால் என் பெயரை போட கூடாது என ஏற்கனவே கூறிவிட்டேன் என்றார்.
- தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது.
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?
தி.மு.க.விற்கு எதிரான அணிகள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க.விற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, தி.மு.க.வை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான்.
* நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம்.
* தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது.
* தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்பதை யாராவது சொல்வார்களா?
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?
* எந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை தி.மு.க. எதிர்க்கிறது.
* இந்திய நிலப்பரப்பில் 81% நிலக்கரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. இங்கு நிலத்தின் அடியில் உள்ள வளத்தை எடுக்க அனுமதிக்கக்கூடாது.
* போர் நடந்த இடத்தில் கூட மீள்குடியேற்றம் செய்துவிட முடியும். ஆனால் நிலத்தின் வளத்தை எடுத்து விட்டால் அது சுடுகாடாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விழுப்புரம்:
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்கள் ஆகியும் வன்னியர் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாக்டர் அன்புமணி அறிவித்திருந்தார்.
அதன் விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
- ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தனது வீட்டில் தனது இருக்கைக்கு கீழ்ப்பகுதியில் விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி எஸ்.பி தினகரனிடம் புகார் மனு அளித்திருந்தனர் .
இந்த நிலையில் 6-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கும்போது ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது .
அதற்கு தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்கிறதா என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் 2 நாட்களில் யார் ஒட்டு கேட்கும் கருவி வைத்தார்கள் என்று அம்பலமாகும் என தெரிவித்திருந்தார்.
உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு உங்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என கூறியிருந்தார்.
இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீடு மற்றும் அருகே உள்ள டவர்களில் யார் யார் தொலைபேசி மூலமாக யார் யாரிடம் பேசி உள்ளனர் என விசாரணை நடத்தினார்கள்.
அதேபோல டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று 3-வது நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தனியார் ஏஜென்சியின் முழுமையான ஆய்வறிக்கை வந்த பிறகு அந்த ஆய்வு அறிக்கையை டாக்டர் ராமதாசிடம் தனியார் ஏஜென்சி ஒப்படைப்பார்கள். அதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இது சம்பந்தமாக போலீசாரிடம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நான் உடல்நலம் சரியில்லாமல் 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கட்சி நலன் வேண்டி பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றேன்.
- துரை வைகோவை கட்சிக்கு வர வேண்டாம் என்று நான் கூறியபோது நீங்கள் என்ன சர்வாதிகாரியா என கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
நான் உடல்நலம் சரியில்லாமல் 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கட்சி நலன் வேண்டி பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றேன்.
ஆனால் நீங்கள் பேசிக் கொண்டும், எழுந்தும் செல்கிறீர்கள். இந்த இயக்கத்தின் ஜீவ நாடியே தொண்டர்கள்தான். தொண்டர்கள் தான் மனித தெய்வங்கள். 31 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இன்றைக்கு இந்த கட்சி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நமது பொதுக்குழு உறுப்பினர்கள்.
கட்சிக்கு அவைத்தலைவராக இருந்து அறக்கட்டளை பெயரில் முறைகேடு செய்து கட்சிக்கு துரோகம் செய்து வந்தவரிடம் தொலைபேசியில் (மல்லை சத்யா) பேசுகிறார். வெளிநாட்டில் இருந்து கொண்டு என்னை இழிவுப்படுத்தி பதிவு போடுகிறவரிடம் தொலைபேசியில் பேசுகிறார்.
இது குறித்து கேட்டால் பேசினேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற சக்தியுடன் சேர்ந்துள்ளீர்களோ. இப்போது நமது துணை பொதுச்செயலாளர் இங்கு ஒரு தீர்மானத்தை (மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க) நிறைவேற்றலாம் என்று கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று கூறி விட்டேன்.
துரை வைகோவை கட்சிக்கு வர வேண்டாம் என்று நான் கூறியபோது நீங்கள் என்ன சர்வாதிகாரியா என கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.
அதன் பிறகுதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் 106 வாக்குகளில் 104 வாக்குகளை துரை வைகோ பெற்றார். இந்நிலையில் வாரிசு அரசியல் வேண்டாம் என்று சொன்ன வைகோ இன்று வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார் என்ற பழி சொல்லுக்கு ஆளாகியுள்ளேன். துரோகத்தை தாண்டி கட்சியை காத்து வருகிறேன். கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எனது தாயார் மாரியம்மாள் 1000 பேரை திரட்டி உண்ணாவிரதம் இருந்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்காக போராடி வெற்றி பெற்றேன். காவேரி நதிநீர் பிரச்சனைக்காக இயக்கம் தொடங்கி பாடுபட்டேன். மீத்தேன் எரிவாயு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வெற்றி பெற்றேன். தற்போது பா.ஜ.க.வோடு நான் பேசி வருகிறேன்.
எனது மகனுக்கு மந்திரி பதவியை பெற்றுத்தர போகிறேன் என்று பொய் தகவலை பரப்புகிறார்கள். தமிழகத்திற்குள் இந்துத்துவா வரக்கூடாது என கடந்த தேர்தலில் முடிவு செய்தோம். திராவிட இயக்கத்திற்கு உறுதியாக இருந்தோம். இன்றும் அதையே கூறுகிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி. செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நீங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வந்துள்ளது.
- ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
திண்டிவனம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் பா.ம.க.வினர் கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் ராமதாசிடம் ஒட்டு கேட்பு கருவி பற்றி அவர்கள் கேட்டு வருகின்றனர். இதையடுத்து அங்குள்ள ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






