என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

16 குற்றச்சாட்டுகள்... அன்புமணி விளக்கம் அளிக்க கெடு விதித்த ராமதாஸ்
- அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
- தைலாபுரத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
அதாவது கட்சிக்கும் டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டது. டாக்டர் ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டு கேட்பு கருவி வைத்தது, அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, மக்கள் தொலைக்காட்சியை கைப்பற்றியது என 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அப்படி பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்தக் குழுவுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மீதான புகார்கள் குறித்து முடிவெடுக்க இன்று தைலாபுரத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வருகிற 31-ந்தேதி வரை கெடு விதித்துள்ளார்.






