என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • இரண்டு விவசாயிகளுக்கு இடையே முன்பகை இருந்துள்ளது.
    • இன்று தகராறு கைகலப்பில் முடிய, கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மற்றும் ஜான்சன். இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, ஜான்சன் குமரனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளா். அவரது உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது குமரன் உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    குற்றவாளி ஜான்சனை கைது செய்யும் வரை உடலை எடுத்து செல்ல விடமாட்டோம் என ஆம்புலன்சை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
    • தைலாபுரத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

    அதாவது கட்சிக்கும் டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டது. டாக்டர் ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டு கேட்பு கருவி வைத்தது, அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, மக்கள் தொலைக்காட்சியை கைப்பற்றியது என 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அப்படி பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்தக் குழுவுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மீதான புகார்கள் குறித்து முடிவெடுக்க இன்று தைலாபுரத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வருகிற 31-ந்தேதி வரை கெடு விதித்துள்ளார்.

    • அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
    • 7 நாட்களுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

    அதாவது கட்சிக்கும் டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டது. டாக்டர் ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டு கேட்பு கருவி வைத்தது, அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, மக்கள் தொலைக்காட்சியை கைப்பற்றியது என 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அப்படி பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்தக் குழுவுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் மீதான புகார்கள் குறித்து முடிவெடுக்க இன்று தைலாபுரத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் எம்.எல்.ஏ.அருள், வந்தவாசி முன்னாள் எம்.பி.துரை, தர்மபுரி நெடுங்கிறன், தலைமை அரசியல் ஆலோசகர் குழு உறுப்பினர் சேலம் சதாசிவம், மாநில மகளிர் அணி செயலாளர் தஞ்சாவூர் பானுமதி, ஆடுதுறை ம.க ஸ்டாலின், திருமலை குமாரசாமி ஆகியோர் இந்த குழுவில் பல ஆண்டுகளாகவே இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் டாக்டர் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு அதற்கான அறிக்கையை 7 நாட்களுக்குள் டாக்டர் ராமதாசிடம் தெரிவிப்பார்கள். 7 நாட்களுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

    ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பும் நோட்டீசுக்கு அன்புமணி பதில் அளிக்காவிட்டால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயலாம் என பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தின் நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தின் நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய சீமான் சலசலப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்றார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மீண்டும் மேடையேறிய சீமான், "சலசலப்புக்கும் சத்தத்திற்கு அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்" என்று பேச தொண்டர்கள் சத்தமாக கூச்சலிட்டனர்.

    பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரித்த செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    • அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா, 3 மகள்கள், பேரக்குழந்தைகளுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார்.
    • அன்புமணி ராமதாஸ், குடும்பத்தோடு தாயார் சரஸ்வதியிடம் ஆசி பெற்றார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேர்தலுக்கான கூட்டணியையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் நான்தான் முடிவு செய்வேன் என ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் தந்தை- மகன் இடையே கருத்து மோதலும் ஏற்பட்டு வருவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

    இந்த கருத்து மோதல் காரணமாக ராமதாசும், அன்புமணி ராமதாசும் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த மோதல் காரணமாக ராமதாசும், அன்புமணி ராமதாசும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிற நிலையில் சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். பதிலுக்கு ராமதாசும் சிறப்பு பொதுக்குழுவை நாளை கூட்ட உள்ளதாகவும், அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

    நேற்று மாலை அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா, 3 மகள்கள், பேரக்குழந்தைகளுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    அப்போது ராமதாஸ் உடன் இருந்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ், குடும்பத்தோடு தாயார் சரஸ்வதியிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து சில மணி நேரம் குடும்பத்தினருடன் அவர் பேசினார். அதன் பிறகு இரவு அன்புமணி ராமதாஸ் குடும்பத்தோடு தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார்.

    இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சிலர் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை நிச்சயம் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.

    • பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சிலர் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது.
    • புதுச்சேரி சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி பொதுக்குழு நடப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
    • புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பூம்புகாரில் நடந்தது மாநாடு அல்ல பெருவிழா. இதில் 1 லட்சம் மகளிர் பங்கேற்றனர். மழை மட்டும் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய மாநாடாக அமைந்திருக்கும். இப்படி ஒரு மாநாட்டை யாராலும் நடத்த முடியாது. எத்தனை பிரமாண்டத்திற்குள்ளையும் அடக்க முடியாத மாநாடாக அமைந்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் வருகின்ற 17-ந் தேதி மிக சிறப்பான பொதுக்குழு நடைபெற உள்ளது. அதுவும் வரலாற்று சிறப்பு பொதுக்குழுவாக அமையும்.

    சென்னை திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும். சிறுமியின் சமூக வலைதளங்களை காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.

    சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு வேறு எதையோ பார்த்து வருகிறார்கள். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை தாரைவார்த்தோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறதோ அதேபோல் ஆற்று மணல் திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நிறுத்த அரசு தயாராக இல்லை.

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடை முறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அகழ் ஆய்வில் தமிழ்நாடு எப்போதும் முன் மாதிரி மாநிலம் தான். புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • மாணவன் உயிரிழந்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் வீட்டில் இருந்து மோகன்ராஜ் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளி வளாகத்தின் வழியாக வகுப்பறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    இந்த காட்சிகள் பள்ளி வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதனையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பதறியடித்து கொண்டு ஓடி வந்து மாணவனை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மோகன் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அறிந்த விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    இச்சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், ஏ.எஸ்.பி. ரவீந்திரகுப்தா மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

    • ஜி.கே.மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • வருகின்ற 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் ஜி.கே.மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வருகின்ற 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்தும், நாளை அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளுவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    • திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார்
    • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சித்திரவதைசெய்வதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது காவல் நிலையம் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா என்ற இளம்பெண். துணை ஆட்சியர் காரின் முன் படுத்து உரண்டு அவரும் அவர் குடும்பத்தினரும் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவருடன் சமூக நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

    • அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.
    • பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார்.

    * தைலாபுரம் இல்லத்திற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவும் இல்லை, நான் கதவை அடைக்கவும் இல்லை.

    * கட்சியை உறிஞ்சி எடுத்து, நான் தான் கட்சி என்று சொல்ல அன்புமணி துடிக்கிறார்.

    * அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.

    * அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க கூறினேன்.

    * களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்காமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார் அன்புமணி.

    * நான்தான் தலைவர் என்று சொல்லி கொண்டு என்னவெல்லாமோ செய்கிறார் அன்புமணி.

    * பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.

    * பை பையாக பொய்களை வைத்துள்ளார் அன்புமணி. வாய் கூசாமல் பொய் சொல்வார் அன்புமணி.

    * அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் கட்சியை பறிக்க முயல்கிறார்.

    * பா.ம.க.வின் நிறுவனரும், தலைவரும் நானே என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

    • வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் இல்லத்தில் வைபை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

    இதையடுத்து ராமதாஸ், தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான். தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் இல்லத்தில் வைபை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டது. அன்புமணி மேலாளர் சசிகுமார் மூலமாகவே ராமதாஸ் இல்லத்தில் வைபை, சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக ராமதாசின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    ×